Search This Blog n

03 July 2018

காப்பாற்றுவதாக வாக்களித்த சாமியார்!! அம்பலத்திற்கு வரும் சங்கதிகள்

 டெல்லியில் 11 பேர் மர்மமான முறையில் உயிரிழ்ந்த விடயத்தில் சாமியார் ஒருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிசார் குறித்த சாமியாருக்கு வலை 
விரித்துள்ளனர்.
டெல்லி புராரி பகுதியிலுள்ள வீட்டிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.அந்த வீட்டில் பொலிசார் நடத்திய விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சைலன்ட் மோடில் போன்
குறித்த வீட்டில் துணி வைக்கும் இடத்தில் செல்போன் ஒன்று சைலன்ட் மோடில் இருந்துள்ளது. அதை சுவற்றுடன் டேப் போட்டு ஒட்டி வைத்து இருந்துள்ளனர்.இதற்கும் கூட, என்ன காரணம் என்று பொலிஸ் கண்டுபிடித்துள்ளது. அதன்படி, இந்த முக்தி அடையும் சடங்கிற்கு செல்போன் ஆகாது. அதை பக்கத்தில் வைத்துக் கொள்ள கூடாது என்று ஒரு சாமியார் சொல்லி இருக்கிறார
அந்த செல்போன் உரையாடலின் படி ஒரு பிரபல சாமியாரிடம் இந்த குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி போனில் பேசி இருக்கிறார்கள். அந்த போன் ரெக்கார்டுகள் எல்லாம் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யார் அந்த சாமியார் என்ற தகவலை இதுவரை பொலிசார் வெளியிடவில்லை.
தற்போது அந்த சாமியார் இருக்கும் இடத்தை பொலிஸ் கண்டுபிடிக்கும் முடிவில் உள்ளது.அங்கு கிடைத்த டைரி குறிப்பில் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருந்துள்ளது. அதில், நீங்கள் எல்லாம் மிகவும் நல்ல பூஜை செய்து கடவுளுடன் ஐக்கியம் ஆனவர்கள்.
உங்களுக்கு தூக்கு மூலம் மரணம் வராது. நீங்கள் தூக்கு மாட்டி சடங்கு செய்யுங்கள்.ஏதாவது தவறாக நடந்தால், கடைசி நேரத்தில் சாமியார் வந்து காப்பாற்றுவார் என்று அந்த மர்ம சாமியார் கூறியதாக டைரியில் எழுதப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

Post a Comment