தமிழகத்தின் ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டி கொன்ற சி.சி.டி.வி காட்சி வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவாட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மதீஸ்வரனும் கேரளாவை சேர்ந்த நடனக் கலைஞர்
பிரியாவும் நான்கு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். பெண் குழந்தை பிறந்த
பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கணவனிடம் வளரும் மகளை தன்னிடம் பெற்று தரகோரி பிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
. கடந்த 20ம் திகதி கேரளா திரும்ப ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பிரியாவை அவரது கணவர் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment