Search This Blog n

05 July 2018

அரைமணிநேரம் தண்ணீரில் மிதந்து உலக சாதனை படைத்த தமிழ் சிறுவன்

பாலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த யோகாசன முறையில் அரை மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு 11 வயது நிரம்பிய திருவண்ணாமலை சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்
 7ஆம் வகுப்பு மாணவன் சிவகுரு. இவர், பாலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக யோகாசனம் மூலம் கின்னஸ் சாதனை
 முயற்சியில் ஈடுபட்டார்.
தண்ணீரில் மிதந்துவாறு அரைமணிநேரம் சவாசனம் அல்லது சாந்தியாசனம் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
புவியை பெருமளவிற்கு மாசுபடுத்தி வரும் பாலித்தீன் ஒழிப்புக்காக அல்லது பயன்பாட்டினை குறைக்க விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சிறுவன் மேற்கொண்ட முயற்சி பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

23:52 05.07.201

0 கருத்துகள்:

Post a Comment