This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 June 2014

பெற்ற மகளின் கற்பை சூரையாடிய தந்தை

 மங்களூரில் பெற்ற மகளையே கற்பழித்ததாக கூலித் தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே பஜ்பே பொலிஸ் எல்லைக்குட்பட்ட கரும்பார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சேகர் (47).
கூலித் தொழிலாளியான இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார்.
மனைவி இறந்துபோய் விட்டதால் சந்திர சேகர் அவரது மகளுடன் வாழ்ந்து வந்தார். அவ்வப்போது சந்திரசேகரின் வீட்டிற்கு அவருடைய மனைவியின் தங்கை வந்து சிறுமியை பார்த்து நலம் விசாரித்து செல்வார். மேலும் சந்திரசேகருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்திரசேகர் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது மதுகுடித்து போதையில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக அவர் குடிபோதையில் வீட்டில் தனியாக இருக்கும் 17 வயது சிறுமியை பெற்ற மகள் என்று கூட பாராமல் கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக அவர் சிறுமியை மிரட்டி உள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவம் சந்திரசேகரின் வீட்டின் அருகே உள்ள அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து மங்களூர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பஜ்பே பொலிசார் உதவியுடன் சென்று சிறுமியை மீட்டு மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பஜ்பே பொலிசார் பெற்ற மகளையே கற்பழித்ததாக கூறப்படும் சந்திர சேகரை கைது செய்துள்ளனர்.
 

20 June 2014

திருகோணமலைக்கு வடக்கே 7 இந்திய மீனவர்கள் கைது!

திருகோணமலை வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் 07 பேரை கடற்படையினர் நேற்று கைதுசெய்ததாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கடற்படையினர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இம்மீனவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
 

14 June 2014

நடிகை சொர்ணாக்கா மாரடைப்பால் மரணம்!

 'தூள்' படத்தில் அனைவரும் ரசித்த சொர்ணாக்கா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தெலுங்கானா சகுந்தலா. நேற்று இரவு அவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. தெலுங்கானா சகுந்தலா 1981 ஆம் ஆண்டு அவர் சினிமாவில் அறிமுகமானார். 70-க்கும் மேற்பட்ட படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடல் உள்வாங்கியதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

 கன்னியாகுமரியில் கடல் உள் வாங்கியதால் இன்று காலை திடீரென கடலில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடல் நீர் உள் வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த பாறைகள், பாசிகள் வெளியே தெரிந்தன. அதிகாலையில் கடலில் நீராடச் சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பதறியடித்து கரை திரும்பினர். கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.
கடல் உள்வாங்கியதால் படகுத்துறையில் நீர்மட்டம் தாழ்ந்தது. இதன் காரணமாக விவேகானந்தர் பாறைக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிகாலையிலேயே படகில் செல்ல டிக்கெட் வாங்க காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பகல் 10 மணியளவில் கடலின் நீர்மட்டம் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் படகு இயக்கப்படவில்லை. 

மற்றைய செய்திகள்

12 June 2014

அகதி அந்தஸ்து கோருவதற்காக கடலில் நீந்திச் சென்றார் இலங்கையர்!

தமிழ் நாட்டில் அகதி அந்தஸ்த்து கோருவதற்காக இலங்கையில் இருந்து கடலில் நீந்திச் சென்ற கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டுள்ளனர். 
ராமேஸ்வரம் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லும் வேளையில், திடீரேன கடலில் தென்பட்ட குறித்த இலங்கையரை அவர்கள் காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர்.
அவர் தமிழகத்தின் விசாரணைப் பிரிவு காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் இருந்து சென்ற மீனவர் படகு ஒன்றின் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ள தீவு ஒன்றில் இறக்கிடப்பட்டதன் பின்னர், அவர் நீந்தி கரை சேர முற்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 

11 June 2014

மூளை வீக்க நோய் தாக்கம் - இதுவரை 38 சிறுவர்கள் மரணம்!

பீகாரில் உள்ள முசார்பர்பூர் மாவட்டத்தில் மூளை வீக்கம் காரணமாக இந்த வருடம் மட்டும் இதுவரை 38 சிறுவர் சிறுமியர் உயிரிழந்ததுடன், 120 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடுமையான வியாதி ஏழை மக்களை தான் வெகுவாக தாக்குகிறது. இந்நோய்க்கு இதுவரை எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எட்டு வயது பெண்ணின் தற்போதைய நிலை நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது
அச்சிறுமிக்கு மூளை வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள மருத்துவர்கள் அவள் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அவளது பெற்றொர் நேற்று காலை கடுமையான காய்ச்சல் மற்றும் நடுக்கத்தால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த இருபது வருடங்களாக முசாபர்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயிர் கொல்லும் பயங்கரமான இந்நோய் ஏன் பரவுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரிலும் இதே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நோய் பரவ முக்கிய காரணம் கடும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை தான் என அறுவை சிகிச்சை நிபுணரான கியான் பூஷன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தலைநகர் டெல்லியில் இது குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு இந்நோயை குணப்படுத்துவது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்நோயை தடுக்க ஐந்து ஆண்டு திட்டத்தை வகுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். முசாபர்பூரில் மூளை வீக்க நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது
.

கோடீஸ்வரர் குடும்பங்களது எண்ணிக்கை 1.75 லட்சம்!

 உலக அளவில் கோடீஸ்வர குடும்பங்களின் பட்டியலில், இந்தியா 16-ஆவது இடத்திலிருந்து 15-ஆவது இடத்தை எட்டியுள்ளதாக, போஸ்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில், இந்தியா 7வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 1.75 லட்சம் கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிநபர் சொத்து குறித்து ஆய்வு நடத்திய போஸ்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த பட்டியலில், 71 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
2012ஆம் ஆண்டில் 15 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களுடன் இருந்த சீனா, கடந்த ஆண்டு 24 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களைக் கொண்டிருந்தது. ஜப்பானில் டாலருக்கு எதிரான யென் மதிப்பு வீழ்ச்சியால், 2102ஆம் ஆண்டு 15 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்கள், கடந்த ஆண்டு 12 லட்சமாக குறைந்தது. உலக அளவில் 2012ஆம் ஆண்டு 13.7%ஆக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 16.3%ஆக அதிகரித்தது.
2012ஆம் ஆண்டு 8.7% இருந்த தனிநபர் நிதி வளர்ச்சி, பங்கு சந்தைகளின் வளர்ச்சியால் 2013ஆம் ஆண்டு 14.6% வளர்ச்சியடைந்தது. கோடீஸ்வர குடும்பங்களின் பட்டியலில் 2012ஆம் ஆண்டு 16ஆவது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த ஆண்டு 15வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று போஸ்டன் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.