பீகாரில் உள்ள முசார்பர்பூர் மாவட்டத்தில் மூளை வீக்கம் காரணமாக இந்த வருடம் மட்டும் இதுவரை 38 சிறுவர் சிறுமியர் உயிரிழந்ததுடன், 120 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடுமையான வியாதி ஏழை மக்களை தான் வெகுவாக தாக்குகிறது. இந்நோய்க்கு இதுவரை எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எட்டு வயது பெண்ணின் தற்போதைய நிலை நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது
அச்சிறுமிக்கு மூளை வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள மருத்துவர்கள் அவள் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அவளது பெற்றொர் நேற்று காலை கடுமையான காய்ச்சல் மற்றும் நடுக்கத்தால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அச்சிறுமிக்கு மூளை வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள மருத்துவர்கள் அவள் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அவளது பெற்றொர் நேற்று காலை கடுமையான காய்ச்சல் மற்றும் நடுக்கத்தால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த இருபது வருடங்களாக முசாபர்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயிர் கொல்லும் பயங்கரமான இந்நோய் ஏன் பரவுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரிலும் இதே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நோய் பரவ முக்கிய காரணம் கடும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை தான் என அறுவை சிகிச்சை நிபுணரான கியான் பூஷன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தலைநகர் டெல்லியில் இது குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு இந்நோயை குணப்படுத்துவது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்நோயை தடுக்க ஐந்து ஆண்டு திட்டத்தை வகுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். முசாபர்பூரில் மூளை வீக்க நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது
.
0 கருத்துகள்:
Post a Comment