ராமேஸ்வரம்: இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவின்பேரில் தமிழக மீனவர்கள் 29 பேர் மன்னார் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மீனவர்களின் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த மாதம் 31ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேரையும், 7 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வரும் 16ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, தமிழக மீனவர்கள் 29 பேரை விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இலங்கை அட்டர்னி ஜெனரல், மன்னார் நீதிமன்றத்திற்கு அதிபர் உத்தரவு ஆணையை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, 29 பேரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்து நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டார். அப்போது, படகுகளை விடுவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, படகுகளை விடுவிப்பது தொடர்பாக வரும் 16ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து, 29 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் விரைவில் நாடு திரும்ப உள்ளனர். ஆனால், மேலும் 4 மீனவர்களும் இந்திய தூரதக அதிகாரிகள் பாதுகாப்பில் உள்ளனர்
0 கருத்துகள்:
Post a Comment