Search This Blog n

03 June 2014

தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது இந்தியா;

இலங்கைத் தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது இந்தியா; யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் பிரதானி தெரிவிப்பு
இந்திய அரசு இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் வடக்கு மாகாணத்துக்கு 125 பில்லியன்  ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் பிரதானி ஜஸ்ரின் மோகன்.   பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சி மாநாடு நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு  உரை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “”இரு நாட்டு அரசுகளதும் கூட்டு முயற்சியால் இலங்கையில் பல அபிவிருத்திகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.  வடக்கு மாகாணத்திலும் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   யாழ்ப்பாணத்தில், அச்சுவேலியில் அமைக்கப்படும் கைத்தொழில் பேட்டைக்கு  220 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இன்னும் 2 மாதங்களில் அது ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அதனால்  யாழ்ப்பாண மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.    குருநகரில் 166 மில்லியன் ருபா செலவில் மீன்பிடி வலைத் தொழிற்சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதற்கு ஜப்பானில் இருந்து உயர்தர இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் 5 மடங்காக  தொழிற்சாலையில் நன்மை அதிகரித்துள்ளது.   இலங்கைத்தமிழர்களுக்காக பல வளர்ச்சி திட்டங்களை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வடக்கு மாகாணத்துக்கு  மட்டும் 125 பில்லியன் ரூபா செலவு செய்திருக்கின்றோம். இவற்றில் 100 பில்லியன் ரூபா ரயில் புனரமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.   தற்போது  பளை வரை வந்துள்ள ரயில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் வரை வரும். அடுத்த 3 மாதங்களில் காங்கேசன்துறைக்கும் விஸ்தரிக்கப்படும். இவற்றை விடவும் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வருடம்  16 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. இதற்காக  35 பில்லியன் ரூபா செலவு  செய்யப்பட்டது.    12 பில்லியன்  ரூபாவில்  10.5 பில்லியன்  நேரடியாக பயனாளிகளிடம்  வழங்கப்பட்டுள்ளது. இதனை விடவும் விவசாயம் கைத்தொழில், கல்வி எனப் பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காக உதவிகளை வழங்கி வருகிறது. இந்திய அரசியல் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டாலும் உதவிகள் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்காக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

Post a Comment