கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சரிதா நாயர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
சரிதா நாயர் தற்போது ஜாமீனில் உள்ளார். இவர் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசியதாகவும், தனது தொகுதியில் சூரிய மின்தகடு பதிப்பது தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஒரு ஹொட்டலில் பேச வந்தபோது பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் சரிதா நாயர், திருவனந்தபுரத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், நேற்று ஆஜராகி மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் பேசியபோது, நீதிம்னறத்தில் அளித்த ரகசிய வாக்குமூலம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என மறுத்துள்ளார்.
இந்நிலையில், அப்துல்லா குட்டி மீதான பாலியல் புகார் குறித்த தகவல்களை அவர் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
Post a Comment