சீமாந்திரா முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீமாந்திரா முதலமைச்சர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வருகிற 8ம் திகதி விஜயவாடா – குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழக வளாகத்தில் பதவி ஏற்கவுள்ளார்.
விழாவில் கலந்து கொள்ளும்படி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் 11 மாநில முதலமைச்சர், மந்திரிகளுக்கு சந்திரபாபுநாயுடு அழைப்பு விடுத்து உள்ளார்.
இதுதவிர எம்.பி.க்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்பட 5 ஆயிரம் வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் வருகின்றனர்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், அவரது மகனும் பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்பீர்சிங் ஆகியோரும் பங்கேற்பது உறுதியாகிவிட்டதாக தெலுங்கு தேச கட்சி செயலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
மேலும், பதவி ஏற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜனசேனா கட்சி தலைவரும், சிரஞ்சீவி தம்பியுமான நடிகர் பவன்கல்யாண் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment