Search This Blog n

12 June 2014

அகதி அந்தஸ்து கோருவதற்காக கடலில் நீந்திச் சென்றார் இலங்கையர்!

தமிழ் நாட்டில் அகதி அந்தஸ்த்து கோருவதற்காக இலங்கையில் இருந்து கடலில் நீந்திச் சென்ற கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டுள்ளனர். 
ராமேஸ்வரம் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லும் வேளையில், திடீரேன கடலில் தென்பட்ட குறித்த இலங்கையரை அவர்கள் காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர்.
அவர் தமிழகத்தின் விசாரணைப் பிரிவு காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் இருந்து சென்ற மீனவர் படகு ஒன்றின் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ள தீவு ஒன்றில் இறக்கிடப்பட்டதன் பின்னர், அவர் நீந்தி கரை சேர முற்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 

0 கருத்துகள்:

Post a Comment