Search This Blog n

05 June 2014

பேஸ்புக்கில் போட்டோ களை இழிவு படுத்தியவர் அடித்துக்கொலை!

புனேவை சேர்ந்த 24 வயதுமிக்க மொஹின் சாதிக் ஷைக் என்ற முஸ்லிம் கணிப்பொறி பொறியாளரை ஹிந்து ராஷ்டிரா சேனா அமைப்பை சேர்ந்த 7 பேர் அடித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மொஹின் சாதிக் ஷைக் பேஸ்புக்கில் சிவாஜி போட்டோவையும் சிவ சேனா தலைவர் பால் தாக்கரே போட்டோவையும் இழிவு படுத்தி பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ளார்.
 இதற்கு பலரிடம் இருந்து எதிர்ப்பு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அவர் தனது நண்பருடன் மசூதியில் தொழுகை நடத்தி விட்டு திரும்பும் போது ஹிந்து ராஷ்டிரா சேனா அமைப்பை சேர்ந்த 7 பேரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதனால் புனேவில் பரப்பரப்பு ஏற்பட்டது. 200 க்கும் அதிகமான பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 



0 கருத்துகள்:

Post a Comment