இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை எதிர்வரும் மே மாதம் 12ம் மற்றும் 13ம் திகதிகளில் நடத்துவதற்கு இணங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசாங்கம் இதற்கான அனுமதியை வழங்கி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தமிழக அரசாங்கத்தின் சார்பில், தமிழக மீன்பிடித் திணைக்களத்தின் செயலாளர் எஸ்.விஜயம், மத்திய அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசாங்கம் இலங்கையில் உள்ள தமது உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக, இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து, இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான ஒழுங்குகளை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி இரண்டு தரப்புக்கும் இடையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்திருந்தது.
இதன் பின்னர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், இரண்டு தடவைகள் இந்த பேச்சுவார்த்தைகள் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டன.
இந்த நிலையில் மே மாதம் இந்த பேச்சுவார்த்தை நடத்த இணங்கப்பட்டிருக்கிறது
0 கருத்துகள்:
Post a Comment