.விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்ட போதும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே தியாகதுருகம் பள்ளகசேரியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது தோட்டத்தில் 500 அடி ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். அக்கிணறு சாக்குத் துணியால் மூடப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராமச்சந்திரனின் 3வயது மகள் மதுமிதா எதிர்பாராதவிதமாக அந்த ஆழ்துளை கினற்றில் தவறி விழுந்தாள். இதனால் பதறிப் போன ராமச்சந்திரன் குடும்பத்தினர்
தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் விரைந்து சென்றனர்.குழந்தை விழுந்த கிணறு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. 500 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 25 அடி ஆழத்தில்தான் குழந்தை சிக்கியிருப்பதால் உயிருடன் மீட்டுவிடலாம் என்று தீயணைப்புத் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.நவீன கருவிகளுடன் தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி, கிட்டத்தட்ட 18 மணி நேரங்களுக்கு பிறகு இன்று காலை 3 மணியளவில் சிறுமியை மீட்டனர். உடனடியாக சிகிச்சைகாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மதுமிதா. ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக மதுமிதா உயிரிழந்தாள்.
0 கருத்துகள்:
Post a Comment