பெங்களூரில் பிரபல சாமியார், பெண் பக்தர்களிடம் நெருக்கமாக இருந்த காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் எச்.எஸ்.ஆர். லே அவுட் பகுதியில் திவ்யாஸ்ரீ ஜோதிட ஆலயம் என்ற பெயரில் மடம் நடத்தி வருபவர் ராமசாமி தேவிஸ்ரீ குருஜி.
இவர் மீது அதிக நம்பிக்கை வைத்து பெண்கள் அதிகளவில் ஜோதிடம் பார்த்து சென்றுள்ளனர்.தற்போது, தன்னை தேடி வந்த பெண் பக்தையை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் காட்சி தனியார் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளது.
மேலும், குடும்ப பிரச்னைக்காக ஜோதிடம் பார்க்க வந்த பெண் ஒருவருக்கு ஆசை வார்த்தை கூறி அவருடன் பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் மூலிகை மருந்து கொடுத்து அவரின் கர்ப்பத்தை கலைத்தாகவும் புகார் வந்துள்ளது. இந்த காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், கன்னட அமைப்பினர் அங்கு கூடி அவரின் ஜோதிட ஆலயத்தை சூறையாடியுள்ளனர்.
இந்நிலையில், சாமியார் மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment