இந்திய அமெரிக்கர் ஒருவர் மருத்துவ காப்பீடு திட்டங்களில் முறைகேடு மற்றும் சுகாதார சேவை பணிகளுக்கு அதிக கட்டணம் வசூலித்தல் ஆகிய குற்றத்திற்காக அவருக்கு 6 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
நெவாடாவில் எண்டோஸ்கோபி மையம் ஒன்றை நடத்தி வந்தவர் தீபக் தேசாய். இந்திய அமெரிக்கரான 65 வயது நிறைந்த
தேசாய் முன்னாள் மருத்துவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் நெவாடா மாவட்ட நீதிபதி டேனியல் போக்டென் கூறும்போது,
தேசாய்க்கு 71 மாதங்கள்
மத்திய சிறையில் அடைக்க தண்டனை விதிக்கப்படுகிறது. தேசாய் மத்திய சுகாதார திட்ட முறையை தனது சொந்த வசதிக்காக உள்நோக்கத்துடன் முறைகேடாக பயன்படுத்தி உள்ளார் என்று போக்டென் கூறியுள்ளார்.
இது நெவாடாவின் மக்களுக்கும் மற்றும்
வர்த்தகத்திற்கும் நீண்ட மற்றும் மதிப்பை குறைக்க கூடிய துன்பத்தை விளைவிக்கும் செயல் என நாங்கள் நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார். அவர் கடந்த ஏப்ரலில் சுகாதார
முறைகேடுகள் தொடர்புடைய குற்ற செயல்களில்
ஈடுபட்டுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 2005 மற்றும் பிப்ரவரி 2008ம் ஆண்டுகளில் தேசாய் மீதுள்ள குற்றச்சாட்டின்படி, தனது எண்டோஸ்கோபி மையத்தில்,
அனெஸ்தீசியா கொடுப்பதற்கு என முறையாக பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்ட செவிலியர்கள் நோயாளிகளுடன் செலவிடுவதம் நேரத்தை அதிக அளவில் காட்டி அதிக கட்டணத்தை பெற்றுள்ளார் என்று
கூறப்பட்டு உள்ளது.
அனெஸ்தீசியா சேவை பணிகளுக்கான கட்டணத்தை பெறுவதற்கு என்று தனியாக நிறுவனம் ஒன்றை தேசாய் மற்றும் மற்றொரு நபரான டோனியா ரஷிங் ஆகியோர் கூட்டாக தொடங்கியுள்ளனர். எண்டோஸ்கோபி மையத்தில் அனெஸ்தீசியா சேவை பணிகளுக்காக பெறப்படும் அனைத்து கட்டண
தொகையில் இருந்தும் 9 சதவீத தொகையை இந்த நிறுவனம் பெற்று கொள்கிறது. தேசாய் மற்றும் ரஷிங் இருவரும் எண்டோஸ்கோபி மையத்தில் பணிபுரிந்தவர்களிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு அதிக நோயாளிகளுக்கு சேவை செய்ய முடியுமோ அதன்படி செய்யுங்கள் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.
அதனுடன், அனெஸ்தீசியா முறைகளில் அதிக நேரம் செலவிட்டது போன்று பதிவேடுகளில் குறிப்பிடும்படி செவிலியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தவறான அனெஸ்தீசியா பதிவேடுகளையே கொண்டு மெடிகேர், மெடிக்எய்டு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டு தொகை பெற பயன்படுத்தி கொள்ளும்படி அலுவலக ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment