Search This Blog n

29 July 2015

விடிய-விடிய அப்துல்கலாம் வீட்டில் திரண்ட கிராம மக்கள் படத்துக்கு மலர்தூவி கண்ணீர் அஞ்சலி

ஏவுகணை நாயகனான அப்துல்கலாமின் மறைவு  நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும்  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது கடைசி மூச்சுவரை நாட்டிற்கு சேவை செய்த அந்த சரித்திர  நாயகனின் உடல் நல்லடக்கம் நாளை ராமேசுவரத்தில் நடக்கிறது. அவரது மறைவையொட்டி, ராமேசுவரம் 
பள்ளிவாசல்
 தெருவில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.
அவர்கள் அங்குள்ள அவரது உருவப்படத்துக்கு மலர் வைத்தும், தீபம் ஏற்றியும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் பொதுமக்கள்
 அணி அணியாக வந்து  அஞ்சலி செலுத்துவதை காண முடிந்தது.
 ராமேசுவரத்தில் உள்ள  கலாம் படித்த பள்ளி மாணவர்களும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி 
அஞ்சலி செலுத்தினர். ராமேசுவரத்தில்  அரசியல் கட்சியினர், ஆட்டோ ஓட்டுனர்கள், மீனவர்கள், கூலித் தொழி லாளர்கள் என அனைத்து தரப்பினரும்  ஜாதி, மத பேதமில்லாமல் தங்கள் மண்ணின் மைந்தன் என்ற பெருமையை நினைத்து அவரது வீட்டிற்கு வந்து 
அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment