இரண்டு இலங்கை அகதிகள் இந்தியாவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் திருநெல்வேலியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 42 வயதான தியாகராஜன் மற்றும் அவரது நண்பர் கே. சசிகுமார் ஆகியோர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஞானைக்கொண்டான் அகதி முகாமில் வசித்து வந்தவர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுரை சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் மோதுண்டு இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த அம்பியூலன்ஸ், மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
Post a Comment