சிறிலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வான்வழியில் இடம்பெற்ற தங்கக்கடத்தல்கள் பெரும்பாலும் முறியடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடத்தல் காரர்கள் மாற்றுவழிகளை தெரிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக அவர்கள் சிறிலங்காவில் இருந்து கடல் மார்க்கமாக படகுகள் மூலம் தங்கக் கடத்தலில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன.
எனினும் தமிழக கடற்பரப்பில் அதிக பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கேரள கடற்பரப்பை அதிகமாக பயன்படுத்தவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் கேரளாவின் கொச்சி முதல் கோழிக்கூடு வரையான கடற்கரையோர பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக இந்த கடற்பரப்பில் 11க்கும் அதிகமான புதிய கண்காணிப்பு படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment