This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

25 February 2016

ஆன்மீக நற்பண்பின் மஹா சிவராத்திரி- 2016 :

சிவராத்திரி முந்தைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இருப்பினும் அந்தந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான  ஆன்மீக நற்பண்பின் காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது. இங்கே வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி,அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு “முக்தி” என்பதாகவே...

23 February 2016

நாக பாம்பு வடிவத்தில் உலாவரும் சித்தர்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரை ஒட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பாப்பாம்பாடி கிராம எல்லைக்குட்பட்ட ஆர்.மஹாவீர் ஜெயினின் குமாரர்கள் ராஜேஷ்குமார், வினோத்குமார் ஆகியோருக்கு சொந்தமான விவசாயம் நிலம் உள்ளது. அந்த நிலத்தைப் பார்வையிட அவர்கள் செல்லும்போதெல்லாம் நாக வடிவம் கண்களில் படுவதும் மறைவதும் வழக்கமான ஒன்றாக இருந்ததாம். முதலில் இதனை ஒரு சாதாரணமான விஷயமாக நினைத்தவர்கள், கடவுளை நினைக்கும்போதும், இரவில் தூங்கும்போதும் ஒரு உருவம் தோன்றி மறைந்ததை...

அறிவுத் திறன் (IQ) கொண்டவர்’ என்று உலகச் சாதனை படைத்த ‘விசாலினி

உலகிலேயே மிக அதிக அறிவுத் திறன் (IQ) கொண்டவர்’ என்று உலகச் சாதனை படைத்த ‘விசாலினி’ நெல்லையைச் சேர்ந்த ஒரு சாதாரண எலக்ட்ரீஷியனின் மகள். உலக அளவில் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றவர். இந்திய பிரதமரும் இவரை நேரில் அழைத்துப்  பாராட்டியுள்ளார்.  டைம்ஸ் நவ் நிறுவனம் இவரை பற்றி ‘The Amazing Indian Visalini’ என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளனர். The Youngest Google Speaker, The Youngest TEDx Speaker போன்ற பட்டங்களையும் பெற்றவர் விசாலினி.  ஐந்துக்கும்...

20 February 2016

கச்சதீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு புறப்பட்ட இந்திய பக்தர்கள்!

அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்பதற்காக, இந்திய பக்தர்கள் இன்று காலை படகுகள் மூலம் கச்சத்தீவு புறப்பட்டனர். இலங்கையில் புலிகளுடனான போர், கடந்த 2009-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு முதல் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு இந்திய பக்தர்களை, இலங்கை அரசு அனுமதித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, இன்று மாலை கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, இந்தியாவை சேர்ந்த...

14 February 2016

கண்ணீரில் முடிந்த வாழ்க்கை தண்ணீரில் இறங்கியதால்!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில்   மருத்துவக் கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் என்று ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.மருத்துவ முகாம் முடிவடைந்த  பிறகு  3 மாணவர்கள், 2 மாணவிகள் மட்டும் ஹூலிவானா கிராமத்திற்குச்  சென்றனர். அங்குள்ள கால்வாய் ஒன்றில் ஒரு மாணவர் மட்டும் கால்வாய் கரையோரம் நின்றும்,4 பேர் கால்வாய் தண்ணீரில் இறங்கியும் செல்ஃபி  எடுத்துள்ளனர்.அப்போது,...

09 February 2016

இலங்கை ராமேஸ்வரம் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை !

இந்தியாவில் 111 உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. முதற்கட்டமாக, கங்கை, பிரம்மபுத்திரா உட்பட 5 முக்கிய நதிகளில் நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆறுகள் வழியாக வங்காளதேசம் மற்றும் மியான்மர் வரை வணிகம் செய்ய நீர்வழிப்போக்குவரத்து உருவாக்கப்படும். இன்னும் 6 மாதங்களுக்குள் பராக்காவில் இருந்து பாட்னா வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்கும் பணி  முடிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு...

05 February 2016

தமிழக மீனவரின் பார்வை இலங்கை கடற்படையின் தாக்குதலில் பறிபோனதாக குற்றச்சாட்டு

இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கியதில் இந்தியாவின் தமிழ்நாட்டின் ஜெகதாபட்டினம் மீனவரின் கண் பார்வை பறிபோனதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் முகமது மன்சூர்(36). மீன் பிடிக்கும் போது, இலங்கை கடற்படை யினர் தாக்கியதில் கண்ணில் பலத்த காயத்துடன் மதுரைஅர் விந்த் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.  இதுகுறித்து  முகமது மன்சூர் கூறியது:...

03 February 2016

பெற்றோர்களே உஷாராக இருங்கள் செல்போனால் சிறுவன்பார்வையை இழந்துள்ளான் !!!

தனுஷ் என்ற சிறுவன் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதால் அது வெடித்து பார்வையை இழந்துள்ளான். மதுரானந்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி எட்டியப்பன் என்பவரது 9 வயது மகன் தனுஷ். இவன் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே போன் பேசியுள்ளான். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் வெடித்ததில் கண் பார்வையை இழந்துள்ளான். கண்ணில் விழுந்த செல்போனின் உதிரி பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் தற்போது இடது கண்ணில் மட்டும் லேசாக பார்வை தெரிகிறது என்றும் வலது கண்ணில்...

பள்ளி மாணவன் ரயில் முன்பாக ‚செல்ஃபி‘ எடுக்க முயன்ற போது பலி

சென்னை புறநகர் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த ரயில் முன்பாக „செல்ஃபி“ புகைப்படம் எடுக்க முயன்ற பள்ளி மாணவன், அதே ரயிலில் அடிப்பட்டு பலியானதாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. பூந்தமல்லியிலிருந்து வண்டலூருக்கு பயணித்த தினேஷ்குமார் என்ற 12 ஆம் வகுப்பு மாணவனே பலியாகியுள்ளார். இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மாணவர் தினேஷ்குமாருடன் 5 நண்பர்கள் உடனிருந்ததாக இந்திய ஊடகம் ஒன்றிடம்...