This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

15 February 2014

சக மாணவியை கற்பழித்த மாணவர் கும்பல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பாரத்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் மருத்துவக் கல்வி படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சக மாணவர்கள் 3 பேர் இவரை ஜெய்ப்பூர் பிரதாப் நகருக்கு வரவழைத்து, அவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்துள்ளனர். பின்னர் மயக்கமடைந்த மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவி, நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சங்கனர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில், மாணவியின் கற்பை சூறையாடியது விஜயகுமார், யோகேந்திர குமார் மற்றும் வீரேந்திர குமார் என்பது தெரியவந்தது. மேலும், குற்றவாளிகளில் ஒருவன், அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் மறுத்து விட்டதால் அவர் நீதிமன்றம் சென்றதும் தெரியவந்துள்ளது.

10 February 2014

தீக்குளித்த மனைவி: பார்த்து பார்த்து ரசித்த கணவன்

மகாராஷ்டிராவில் மனைவி தீக்குளித்த போது கணவர் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் கஞ்சூர்மார்க் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி சஞ்சனா கோல்வாங்கர். இத்தம்பதிக்குத் திருமணமாகி 7 வருடமாகி விட்டது. சஞ்சனாவை, அவரது மாமியார் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், மேலும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்துள்ளனர்.
இதனால் சஞ்சனா வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சஞ்சனா தனது கணவர் வீட்டில் தீக்குளித்து விட்டார். இதையடுத்து உடல் முழுவதும் எரிந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு நான்கு நாள் சிகிச்சைக்குப் பின்னர் சஞ்சனா மரணமடைந்தார். மரணமடைவதற்கு முன்பு அவர் பொலிசாருக்கு மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், அன்று எனக்கும், கணவர் வீட்டாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது வேதனையில் நான் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டேன். அப்போது எனது கணவர் நான் எரிவதை ரசித்துப் பார்த்தார். தீயை அணைக்க அவர் முன்வரவில்லை.
நான் வலியால் துடித்தபோதும் எனது கணவர் அமைதியாக இருந்தாரே தவிர காப்பாற்ற முயலவில்லை. கடைசியில்தான் எனது உடலில் தண்ணீரை ஊற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர் என்றும் எனது முடிவுக்கு கணவர், மாமியார் வனிதா, கணவரின் அக்காள் பிரகதி ஆகியோர்தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.
சஞ்சனாவின் மரணத்தைத் தொடர்ந்து தற்போது பொலிசார் இந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.
 

.வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு விளக்கமறியல்


வவுனியா பம்பைமடு கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதிவரை வவுனியா நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா விசாவில் வருகை தந்த இந்தியரான எஸ். குணசேகர் என்பவரே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் நேற்று (8.2.14) மதியம் பம்பைமடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இவர கடந்த 10 நாட்களாக வவுனியாவில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இன்று (9.2.14) காலை வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆயர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

07 February 2014

சுடச் சுட சப்பாத்தி! ருசிப்பதற்கு முந்துங்கள்


அம்மா உணவகங்களில் இந்த மாதம் முதல் சப்பாத்தி உணவினை அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 200 வார்டுகள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

இங்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் சப்பாத்தி வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்போது சப்பாத்தி வழங்கவில்லை.
சப்பாத்திக்கு மாவு பிசையும் எந்திரம் மற்றும் அதற்கான பொருட்கள் அனைத்தும் தற்போது தயாராக உள்ளது. எனவே, இந்த மாதம் அம்மா உணவகங்களில் சம்பாத்தி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருகிற 19ம் திகதி அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு 1 ஆண்டு ஆகிறது. இந்த நாளில் சப்பாத்தி வழங்கலாமா? அல்லது முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24ம் திகதி சப்பாத்தி வழங்கலாமா? என்றும் ஆலோசிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேரு மருத்துவமனை, எழும்பூர் குழந்தை நல மருத்துவமனை ஆகியவற்றிலும் அம்மா உணவகங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
 

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் டொல்பின்களால் பரபரப்பு

ஒரே வாரத்தில் ராமேஸ்வரம் கடற்பகுதியில் இறந்த நிலையில் இரண்டு டால்பின்கள் கரைஒதுங்கிய சம்பவம் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில், அரியவகை கடல் வாழ் உயிரினங்களான டொல்பின், கடல் பசு, திமிங்கிலங்கள் வாழ்கின்றன.
இந்த அரியவகை உயிரினங்கள் கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ன மாற்றங்கள் மற்றும் விபத்துகள் மூலமாக மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 01 மற்றும் பிப்ரவரி 05 என பெப்ரவரி முதல் வாரத்தில் மட்டும் இரண்டு டொல்பின்கள் ராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இறந்தநிலையில் கரை ஒதுங்கின.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட சுற்றுசூழல் ஆய்வாளர் ஜெயகாந்தன்
''அழிந்து வரும் அரிய வகை உயரினமாக டொல்பின் உள்ளதால் இந்திய அரசு 2009 அக்டோபர் மாதம் இந்தியாவின் தேசிய கடல்நீர் விலங்காக டொல்பின்களை அறிவித்தது. மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் டால்பின் மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

பாரம்பரிய மீன்பிடி முறையை மறந்து நாம் ஆழ்கடல் மீன்பிடி முறைகளுக்கு புகுந்து விட்டோம். இதனால் ஆழ்கடலில் வாழும் டொல்பின்கள் கரையை நோக்கி வரத்துவங்கி விட்டன. இதனால் விசைப்படகுகளில் மற்றும் பாறைகளில் மோதி, வலைகளில் பட்டு அதிகம் இறந்து விடுகின்றன.
அரியவகை உயிரினமான டொல்பின் பற்றிய விழிப்புணர்வை கடலோரப் பகுதி மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். பாடசால மாணவர்களுக்கு பாடதிட்டகளில் சுற்றுச்சூழல் கல்வியில் அரிய வகை உயிரினங்களைப் பற்றிய போதிக்கப்படவும் வேண்டும்'' என்றார்.
 

06 February 2014

போஸ் கொடுக்கிறார் கேப்டன்: கொஞ்சம் பாருங்களேன்! ,,என்னம்மா

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிய யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது குறித்து உளுந்தூர்பேட்டையில் அறிவிப்பதாக கூறியிருந்தார் விஜயகாந்த். அம்மாநாட்டுக்கு "முத்திரை" ஒன்று வெளியிட்டார்கள். ஒற்றை விரலை உயர்த்தி "ஒன்றுபடுவோம் ஊழலை ஒழிப்போம்" என்ற முழக்கமும் வெளியிடப்பட்டது. ஆனால் கூட்டணி குறித்த தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்காக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கொடுத்துள்ள விதவிதமான போஸ்கள் உங்களின் பார்வைக்காக இதோ! இத்தனை படங்களையும் பேஸ்புக்கை ஆக்கிரமித்திருக்கும் தேமுதிக பிரமுகர்கள் சுதீஷ், சந்திரகுமார் என அனைவருமே ஷேர் செய்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


01 February 2014

: தமிழக தம்பதி கைது குழந்தை கொலை..

 நியூயார்க் : அமெரிக்காவில், குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி, கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில், நியூயார்க் அருகே உள்ள, நியூஹெவன் பகுதியில் வசிப்பவர்கள் சிவகுமார், 33. இவரது மனைவி தேன்மொழி, 24. இவர்களது, 19 மாத ஆண் குழந்தை அதியன்.
இவர்கள் வீட்டு பணிப்பெண் கிஞ்சால் படேல், 27. கடந்த மாதம், 16ம் தேதி, குழந்தை ஓயாமல் அழுததால், பணிப்பெண் கிஞ்சால், அதியன் தலையை தரையில் மோதச் செய்தார். இதில், குழந்தையின் மண்டை ஓடு உடைந்தது. கடந்த, 26ம் தேதி, குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. இதையடுத்து, பணிப்பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த குழந்தையை உரிய முறையில் பராமரிக்க தவறியதற்காக, தேன்மொழி மீதும், சிவகுமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களும் கைதாகியுள்ளனர்.