This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

12 August 2015

இலங்கையர்கள் தங்கம் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது!

தங்கம் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்களும் தங்கத்துடன் கைது
 செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய சுங்கப் பிரிவின் விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்த இலங்கையர்களை கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து இந்த இரண்டு இலங்கையர்களும் இந்தியா வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
200 கிராம் எடையுடைய நான்கு தங்க பிஸ்கட்கள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கால்களில் போலியாக பென்டேஜ்களை சுற்றி அதனுள் தங்கத்தை மறைத்து கடத்தியுள்ளனர்.
தங்கத்தை சென்னைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய இவர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

11 August 2015

வயல் வெளியில் பயங்கர சத்ததுடன் விழிந்த வினோத பொருள்??'

சத்தீஸ்கர் மாநிலம் ஹாங்பூர் நகரில் உள்ளூர் மக்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பலத்த சத்தம் கேட்டு உள்ளது. உடனே வீட்டுக்குள் இருந்த அனைவரும் வெளியில் வந்து பார்த்து உள்ளனர். அப்போது ஒரு விசித்திரமான பொருள் ஒன்று பறந்து வந்து வயல் வெளியில் விழுந்து உள்ளது.
சனிக்கிழமை இந்த பொருளை பத்திரிகையாளர் ராகுல் பாண்டித என்பவர்  புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார். வானில் இருந்து விழுந்தது என தலைப்பிட்டு இருந்தார். 
”சத்தீஸ்கர் மாநிலம் ஹாஙபூரில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பயங்கர சத்ததுடன் ஒரு பொருள் ஒன்று வானில் இருந்து வயல் வெளியில் விழுந்தது.” என ராகுல்  அதில் தெரிவித்து இருந்தார்.
அந்த் பொருள் என்ன வென்று தெரியவில்லை
. டுவிட்டர் பாலோவர்கள் பலர் தங்கள் ஊகங்களை வைத்து பல கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர். 
சிலர் அதை ஜெட் என்ஜின் என கூறி இருந்தனர். சிலர் செயற்கைகோளின் பாகம் என கூறி இருந்தனர்
கடந்த வெள்ளிக்கிழமை  சத்தீஸ்கர் மாநில ராய்பூர் விமான நிலையத்தில் டாக்கா-மஸ்க்யாட் விமானம் அவசரமாக தரையிறக்கபட்டது அதன் தொடர்புஇடைய பாகமாக இருக்ககூடும் என ராகுல் தெரிவித்து உள்ளார்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

08 August 2015

சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்யவேண்டும்: ராமதாஸ்!

அதிக விலையால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்துச் செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" தெலுங்கானாவில் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்காக போட்டி ஏல முறையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, ஒரு யூனிட் ரூ. 5.17 என்ற விலையில் 200 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல்
 செய்ய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட இது ரூ. 1.84 குறைவு ஆகும்.
தமிழக அரசு கடைபிடித்து வரும் சூரிய ஒளி மின்சாரக் கொள்முதல் முறை மிகவும் தவறானது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், அதைப் பொருட்படுத்தாத  தமிழக அரசு தனியார் பெரு நிறுவனங்களுக்கு சலுகை  காட்டும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை நிர்ணயித்திருக்கிறது. அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் மின்சாரத்தையும்,  மேலும் 31 தனியார் நிறுவனங்களிடமிருந்து 436 மெகாவாட் மின்சாரத்தையும் ஒரு யூனிட் ரூ.07.01 என்ற விலையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.
தெலுங்கானாவில் கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில்  ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதில், ஒப்பந்த காலமான 25 ஆண்டுகளில் யூனிட்டுக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்படும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் இதுவரை 1084 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2722 மெகாவாட் அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன. இந்த அளவு மின்சாரம் ரூ.07.01 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டால் தமிழகத்திற்கு சுமார் ரூ.34,254 கோடி இழப்பு ஏற்படும்.
தமிழ்நாடு மின்வாரியம் ஏற்கனவே பேரிழப்பை எதிர்கொள்ளும் நிலையில் இதையும் தாங்க முடியாது.
மத்தியப் பிரதேச மின்வாரியம் மொரிஷியஸ் நாட்டு நிறுவனத்திடம் ஒரு யூனிட் ரூ.05.05 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போதே தமிழ்நாடு மின்வாரியம் அதன் சூரியஒளி மின்சார கொள்முதல் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழக அரசு அதன் நிலையை இதுவரை மாற்றிக் கொள்ள வில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரிய ஒளி
 மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு அதிக செலவு ஆனது. ஆனால், சூரிய ஒளி மின்திட்டங்கள் இப்போது அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதன் உற்பத்திச் செலவு பெருமளவில் குறைந்து விட்டது. அதேபோல், சூரிய ஒளி மின்சாரத்தின் விலையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த  யூனிட் 10 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக குறைந்து விட்டது.
தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதில் தனியாருக்கு திட்டமிட்டே சலுகை காட்டுகிறது என்பதற்கு ஏராளமான உதாரணங்களைக் காட்ட முடியும். உதாரணமாக, ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.07.01 என்பது  வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்குப் பிறகு மின்னுற்பத்தி செய்யும் சூரிய ஒளி நிறுவனங்களிடம் ரூ.5.87 என்ற விலையில் தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
ஆனால், இந்த சலுகையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தமிழக அரசு நீட்டித்திருக்கிறது. அதானி நிறுவனத்தின் நலன் கருதி மேலும் ஓராண்டு வரை இந்த கூடுதல் விலைச் சலுகையை நீட்டிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இவை அனைத்துக்கும் காரணம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து  ஆட்சியாளர்கள் கோடிக்கணக்கில்  கையூட்டு பெறுவது தான்.
இந்தியாவிலேயே சூரிய ஒளி அதிகமுள்ள மாநிலம் தமிழகம் தான். எனவே, போட்டி ஏல முறையில் சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்தால் 5 ரூபாய்க்கும் குறைவான விலையில் மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க ஏராளமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலையையும், தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, இதுவரை கையெழுத்திடப்பட்ட சூரிய ஒளி மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு போட்டி ஏல முறையில் புதிய கொள்முதல் ஒப்பந்தங்களை செய்து கொள்ள அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

07 August 2015

தண்ணீரில் ஓட்டக்கூடிய சைக்கிளை உருவாக்கிய பேராசிரியை

தெனிந்திய-தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியை ஒருவர்
மழைகாலங்களில் மாணவர்கள் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல ஏதுவாக காலியான ஆயில் டப்பாக்களைக்கொண்டு 
தண்ணீரில் ஓட்டக்கூடிய சைக்கிளை உருவாக்கிய இந்த சகோதரியின் முயற்சிக்கு 
எமது பாராட்டுக்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கடற்படை இந்திய மீனவர்களை கண்டுகொள்ளவில்லையாம்???

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களின் கரைவலை மற்றும் இதர வலைகளை இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் அறுத்தெறிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மீண்டும் போராட்டங்களை 
முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 8 மீனவர்களுடைய சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாக கட்டைக்காடு மீனவர் சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் 
எமது பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, எமது வலைகளை அறுத்து எறிகின்றனர். இதேவேளை றோலர்களில் இந்திய மீனவர்கள் கரை வரையில் வந்து எமது மீனவர்களின் 
வலைகளை அறுக்கின்றனர். முன்னர் கடற்படையினருக்கு அறிவித்தவுடன் அவர்கள் சென்று இந்திய மீனவர்களைக் கைது செய்து வந்தனர். ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் கடற்படையினர் மீனவர்களைக் கைது செய்ய 
முன்வரவில்லை.
புதன்கிழமை இரவு 6 மீனவர்களுடைய வலைகளை அறுத்தெறிந்த இந்திய மீனவர்கள், றோலர்களை கரைக்கு கொண்டு வந்து ஹோன் அடித்துவிட்டுச் சென்றனர். 100க்கும் அதிகமான றோலர்கள் எமது 
கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதால் எமது மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் இருக்கின்றனர். 
தென்னிலங்கை மீனவர்கள் வெள்ளிக்கிழமை (07) அதிகாலையில் இரண்டு மீனவர்களுடைய வலைளை அறுத்துள்ளனர். இவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம். தேர்தல் நடைபெறவுள்ளமையால் உரிய தரப்பினரிடம் சென்று முறைப்பாடு தெரிவிக்க முடியவில்லையென அவர் 
மேலும் கூறினார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

06 August 2015

பயங்கர ஆயுதங்களுடன் 9 தீவிரவாதிகள் ஊடுருவல்???

இந்திய சுதந்திர தினம் 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் சிறப்பான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சுதந்திர தின கொடியேற்றம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்காக தலைநகர் டெல்லியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் நாசவேலைகளில் 
ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகள் 9 பேர் அங்கு நுழைந்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இந்த தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு எச்சரிக்கை
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கடந்த மாதம் அரங்கேற்றப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, டெல்லியில் இந்த தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக உளவு தகவல்கள் கூறுகின்றன. டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைப்பதற்காக இந்த தீவிரவாதிகள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 
இதைத்தொடர்ந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறு அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களையும் மத்திய அரசு எச்சரித்து உள்ளது. 
3 மாதங்களுக்கு முன்னரே...
பஞ்சாப் தாக்குதலுக்கு பிறகு தான் டெல்லியில் தீவிரவாதிகள் நுழைந்திருந்தாலும், அவர்களுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு முன்னரே டெல்லிக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையால் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 
> இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

03 August 2015

இலங்கை செல்ல முயற்சித்த இளைஞன் மண்டபத்தில் கைது???

உரிய பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இராமேஸ்வரம் மண்டபம் பிரதேசத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான அப்துல் ஹக் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல உள்ளுர் முகவர் மூலம் படகு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து விட்டு, மண்டபம் காத்திருந்த போது, காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்துல் ஹக் இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி 2012 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
அவர் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பிரதேசத்தில் இஸ்லாமிய மதரசா ஒன்றில் பயற்சிகளை பெற்றுள்ளதுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.
தாய் மரணமடைந்த செய்தியை கேள்வியுற்ற அப்துல் ஹக் இலங்கை செல்ல முயற்சித்துள்ளார். அவரிடம் செல்லுப்படியான கடவுச்சீட்டு இல்லாத நிலையில், சட்டவிரோதமாக இலங்கை 
செல்ல தீர்மானித்துள்ளார்.
இதற்காக மண்டபம் பிரதேசத்திற்கு வந்த அவர், முகவர் ஒருவருக்கு 37 ஆயிரம் ரூபாவை கொடுத்து இலங்கைக்கு செல்ல படகை ஏற்பாடு செய்திருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>