This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 January 2016

பாஸ்போர்ட் ஒரு வாரத்துக்குள் பெறலாம் விதிகளை தளர்த்தியது அரசு!

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார்  கூறப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது. 2014-ல் 42 நாட்களாகவும் 2015-ல் 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு...

அடுத்தமாதம் வரை தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியலில்!

தமிழக மீனவர்களிற்கு அடுத்தமாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் மொஹமட் ரியாஸ் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த மூன்று மீனவர்கள் இன்று இரண்டாவது முறையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த 17 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து ஸ்ரீலங்கா கடற்படையினரால்  கைதுசெய்யப்பட்டனர். ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த மீனவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில்...

21 January 2016

பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோகும் படி கூறிய பஞ்சாயத்து?

மகாராஸ்டிரா மாநிலத்தில் கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை, தங்கள் பாலியல் தேவைக்கு ஒத்துப் போகும்படி சாதி பஞ்சாயத்து தலைவர்கள் மிரட்டுவதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. மகாராஸ்டிரா மாநிலம் பார்பானி மாவட்டத்தில் உள்ள சேலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தீபக் போர். கோந்தாலி சமூகத்தைச் சேர்ந்த இவர் தங்கள் “சாதி சங்கம பஞ்சாஸ்” என்ற பஞ்சாயத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அவர் இது வரை பஞ்சாயத்திற்கு ரூ.2.5 லட்சம்...

17 January 2016

தொடங்குகிறது நாளை சென்னை ஓபன் செஸ்?

சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்தப்போட்டி நடக்கிறது. என்.மகாலிங்கம் கிண்ணத்திற்கான இந்தப்போட்டியில் 19 கிராண்ட் மாஸ்டர்கள் 21 சர்வதேச மாஸ்டர்கள்  பங்கேற்கின்றார்கள். ரஷ்யா, இஸ்ரேல், இத்தாலி, உஸ்பெகிஸ்தான், நெதர்லாந்து உள்பட 11 நாடுகளில் இருந்து 24 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். இந்தியா சார்பிலும் முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள்...

16 January 2016

நூற்றுக்கணக்கில் கரையொதுங்கும் திமிங்கிலங்கள்

தமிழகத்தின் தூத்துக்குடி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன. அவற்றுள் 45 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தின் தூத்துக்குடி அருகே நேற்றிரவு இந்தத் திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளதாக அதிகாரிகள்  குறிப்பிட்டனர். திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கு உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து அந்தப் பகுதி மக்கள் முயற்சித்த போதிலும், திமிங்கிலங்கள் மீண்டும் கரையொதுங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

15 January 2016

இந்திய மீனவர்கள் தைப்பொங்கலை முன்னிட்டு விடுதலை!

யாழ்ப்பாணத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்கள் தைத் திருநாளை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கடற்றொழில் திணைக்களத்தினூடாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுதப்பட்டே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 45 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் தமது அதிகாரிகளினால் ஊர்க்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 மீனவர்கள் பருத்தித்துறை...

07 January 2016

மாணவர் மூவரின் வெறிச்செயல் மாணவிக்கு கத்திக்குத்து!!!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ்–2 படிப்பவர் மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக, புரசைவாக்கம் பெருமாள்சாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இன்னொரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3 பேர் அங்கு வந்தனர். மாணவி மாதவியோடு  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று மாணவர்களில் ஒருவர் மாதவியின் இடது கையில் கத்தியால் குத்தினார். மாதவியின் கையில் ரத்தம் கொட்டியது. பின்னர் 3...

05 January 2016

இந்திய மீனவர்கள் நால்வர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது!

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காரைநகர் கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை இரவு அத்துமீறி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடற்படையினர்  கைது செய்தனர் . அத்துடன் இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகு ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.  ...