Search This Blog n

29 January 2016

அடுத்தமாதம் வரை தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியலில்!

தமிழக மீனவர்களிற்கு அடுத்தமாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் மொஹமட் ரியாஸ் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டையை சேர்ந்த மூன்று மீனவர்கள் இன்று இரண்டாவது முறையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த 17 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் 
கைதுசெய்யப்பட்டனர்.
ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த மீனவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment