Search This Blog n

15 January 2016

இந்திய மீனவர்கள் தைப்பொங்கலை முன்னிட்டு விடுதலை!

யாழ்ப்பாணத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்கள் தைத் திருநாளை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கடற்றொழில் திணைக்களத்தினூடாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுதப்பட்டே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
45 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் தமது அதிகாரிகளினால் ஊர்க்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 10 மீனவர்கள் பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரமேஷ் கண்ணா
 கூறினார்.
குறித்த மீனவர்களது 45 படகுகளும் மீன் பிடி உபகரணங்களும் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இராமநாதபுரம்,புதுக்கோட்டை நாகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களை விரைவில் நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ் இந்தியத் துணைத் தூதுவர் ஏ. நடராஜன் கூறினார்.
இதேவேளை விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மெற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பணிப்புரை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
தமிழக மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமது அரசாங்கம் மேற்கொள்ளும் என முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 08 இந்திய மீனவர்களை இன்று இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரிடம் கடலில் கையளிக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறைக்கு வடக்கில் அமைந்துள்ள கடல் எல்லைப் பகுதியில் இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரிடம் குறித்த மீனவர்கள் கையளிக்கப்படவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர்
 கூறினார்.
கடந்த 04 ஆம் திகதி இலங்கை மீனவர்களின் படகைத் தாக்கிய குற்ற்ச்சாட்டில் முல்லைத்தீவு மீனவர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் குறித்த 08 மீனவர்களும் கையளிக்கப்பட்டனர்
இந்நிலையில் பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு கடந்த 09 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment