சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ்–2 படிப்பவர் மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக, புரசைவாக்கம் பெருமாள்சாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இன்னொரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3 பேர் அங்கு வந்தனர். மாணவி மாதவியோடு
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திடீரென்று மாணவர்களில் ஒருவர் மாதவியின் இடது கையில் கத்தியால் குத்தினார். மாதவியின் கையில் ரத்தம் கொட்டியது. பின்னர் 3 மாணவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாதவி இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பிரபு விசாரணை மேற்கொண்டார்.
காதல் போட்டி
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
மாணவி மாதவியை பின்தொடர்ந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களும், அதே பகுதியில் உள்ள இன்னொரு பள்ளியில் பிளஸ்–2 படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். அவர்கள் மாதவி தினமும் பள்ளிக்கு வரும்போது பின்தொடர்ந்து வந்து கிண்டல் செய்வார்களாம். நேற்றும் அதுபோல, கிண்டல் செய்துள்ளனர்.
பின்னர் மாதவியிடம் ‘நாங்கள் 3 பேரும் உன்னை காதலிக்கிறோம், நீ எங்களில் யாரை விரும்புகிறாய் என்பதை சொல்ல வேண்டும்’ என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.
மாதவி பதில் ஏதும் சொல்லாமல் நடந்து சென்றுள்ளார். அதன்பிறகு தான் மாணவர்களில் ஒருவர் கத்தியால் குத்தியதாக தெரிகிறது.
போலீஸ் விசாரணையில் மாதவி முரணான தகவல்களை
கூறியதாக தெரிகிறது
. முதலில் 3 மாணவர்களும் யார் என்பதை தெரிவித்துள்ளார். பின்னர் 3 மாணவர்களும் முகத்தில் கைக்குட்டை கட்டியிருந்தனர் என்றும், அவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் மாதவி முதலில் சொன்ன தகவலை வைத்து 3 மாணவர்களையும் தேடி வருவதாக போலீசார்
தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment