Search This Blog n

17 January 2016

தொடங்குகிறது நாளை சென்னை ஓபன் செஸ்?

சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.
என்.மகாலிங்கம் கிண்ணத்திற்கான இந்தப்போட்டியில் 19 கிராண்ட் மாஸ்டர்கள் 21 சர்வதேச மாஸ்டர்கள்
 பங்கேற்கின்றார்கள்.
ரஷ்யா, இஸ்ரேல், இத்தாலி, உஸ்பெகிஸ்தான், நெதர்லாந்து உள்பட 11 நாடுகளில் இருந்து 24 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். இந்தியா சார்பிலும் முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து
 கொள்கிறார்கள்.
இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை 11 லட்சம் இந்திய ரூபாயாகும். சம்பியன் பட்டம் பெறுபவருக்கு 2 லட்சமும், இரண்டாவது இடத்துக்கு 1.5 லட்சமும் கிடைக்கும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் வி.அரிகரன் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment