தமிழகத்தின் தூத்துக்குடி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன.
அவற்றுள் 45 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தின் தூத்துக்குடி அருகே நேற்றிரவு இந்தத் திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளதாக அதிகாரிகள்
குறிப்பிட்டனர்.
திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கு உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து அந்தப் பகுதி மக்கள் முயற்சித்த போதிலும், திமிங்கிலங்கள் மீண்டும் கரையொதுங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1973 ஆம் ஆண்டும் தூத்துக்குடியில், இதேபோன்று திமிங்கிலங்கள் கரையொதுங்கியிருந்ததோடு அவற்றுள் 147 திமிங்கிலங்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment