Search This Blog n

15 August 2013

ஆலய குண்டி வெடிப்பு: தலைமறைவாக இருந்த பூசாரி பொலிசில்


பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போதி கயா ஆலய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மகா போதி கோவிலில் யூலை 7ம் திகதி அதிகாலை அடுத்தடுத்து 9 குண்டுகள் வெடித்தன. இதில் 2 புத்த துறவிகள் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், இந்தியன் முஜாகிதீன்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை குழுவினர் கருதினர். மேலும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் கருதப்படுகிறது.
அதுபோல கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளில் இருந்தும் துப்பு துலக்க இயலவில்லை.
இந்நிலையில் 5 மர்ம நபர்கள் புத்தர் கோவிலுக்குள் சென்று குண்டுகளை வைத்திருக்கலாம் என்று கருதிய தேசிய புலனாய்வு பிரிவினர் அவர்களில் 3 பேரை கைது செய்தனர்.
மேலும் 2 பேரை பொலிசார் வலை வீசி தேடி வந்தனர்.
இவர்களில் ஒருவனான பூசாரி அருப் பிரம்மச்சாரி என்பவனை தேசிய புலனாய்வு பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இவன் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது கோவிலில் தங்கி இருந்தான்.
குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு தலைமறைவாகி விட்ட இவனை சுமார் ஒரு மாத கால தேடலுக்கு பிறகு கைது செய்த பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் குண்டு வெடிப்பு தொடர்பான உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

0 கருத்துகள்:

Post a Comment