Search This Blog n

04 August 2013

தாமினியை ஒரு போதும் கைவிட மாட்டேன்:


என் வீடு தேடி வந்த தாமினியை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று இயக்குனர் சேரன் மகளின் காதலர் கூறியுள்ளார்.
இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மின்னணு ஊடகம் பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த லட்சுமி நாராயணனின் மகன் சந்துருவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தாமினி வீட்டை விட்டு வெளியேறி காதலர் வீட்டில் அடைக்கலம் ஆனார். பின்பு தாமினியும், அவருடைய காதலர் சந்துருவும் சென்னை ஆயிரம் விளக்கு பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு கேட்டு சென்றனர்.
அப்போது சந்துரு ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில், நானும், தாமினியும் கடந்த 2 வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறோம்.
எங்கள் காதல் விவகாரம் சேரனுக்கு தெரியவந்ததும் என்னை கூப்பிட்டு மிரட்டினார். இனிமேல் என் மகளை நீ பார்க்கக் கூடாது. அவளை பின்தொடரக் கூடாது என்று கூறினார்.
அவருடைய மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. என் காதலில் உறுதியாக இருந்தேன். அதேபோல் தாமினியும் உறுதியாக இருந்தாள். இந்த சூழ்நிலையில் சேரன் வீட்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இந்நிலையில் ஒரு நாள் சேரன் அழைத்ததாக ஒருவர் என்னை அழைத்து சென்று தாமினியை மறந்து விடு. இல்லையென்றால் ரோட்டில் நீ போய்க்கொண்டிருக்கும்போதே காரை வைத்து உன்னை தட்டி விடுவோம்.பின்பு நீ ஆசைப்பட்டபடி சினிமாவுக்கும் வர முடியாது என்று மிரட்டினார்.
இந்த சமயத்தில் சேரனும், இன்னும் சிலரும் அங்கு வந்து இவனிடம் என்ன பேச்சு என்று கேட்டு என்னை அடித்து உதைத்தார். உடனே நான் ஓட ஆரம்பித்தேன். என்னை விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்தார்கள்.
இந்த சம்பவத்துக்குப் பின்பு என் அம்மாவும், அக்காவும் பதற்றம் அடைந்தார்கள். நமக்கு இது ஒத்து வராது என்று என்னை கோவையில் உள்ள கட்டிட காண்டிராக்டு தொழில் செய்யும் என் மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். நான் அங்கு மாமா சொன்ன வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.
இந்நிலையில் தாமினி அவள் வீட்டை விட்டு என்னுடைய வீட்டுக்கு வந்துவிட்டதாக சென்னையில் இருந்து தகவல் வந்தது. எப்போது என் வீடு தேடி வந்தாளோ அப்போதே அவள் எனக்குரியவளாகி விட்டாள்.
நானும், தாமினியும் எங்கள் காதலில் உறுதியாக இருக்கிறோம் என்றும் தாமினியை ஒருபோதும் நான் கைவிட மாட்டேன் எனவும் கூறியுள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment