Search This Blog n

05 August 2013

குஜராத்திகளே மும்பையை விட்டு ஒடுங்கள்:


நரேந்திர மோடியை ஆதரிக்கும் குஜராத்திகள் மகாராஷ்டிராவை விட்டு வெளியேற வேண்டும் என்று டுவிட்டரில் அமைச்சர் மகன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, அசாம், மேற்குவங்கம், உத்தர பிரதேச மாநிலங்களிலும் தனி மாநில கோரிக்கை சூடுபிடித்து வருகிறது.
இதனால் 4 மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர் ஷோபா டே தனது டுவிட்டரில் மகாராஷ்டிராவில் இருந்து பிரித்து மும்பையை ஏன் தனி மாநிலமாக ஆக்க கூடாது? அதற்கான எல்லா தகுதிகளும் மும்பைக்கு உள்ளதுஎன்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இவர் கூறிய கருத்துக்கு பாஜ, சிவசேனா, நவ நிர்மான் உள்ளிட்ட கட்சியினர் ஷோபா டேவை எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான நாராயண் ரானேவின் மகன் நிதிஷ் ரானே மோடியை ஆதரிக்கும் குஜராத்திகளே, மராட்டியர்களின் பூமியை விட்டு ஓடுங்கள் குஜராத்துக்கு’ என்று டுவிட்டரில் எழுதி உள்ளார்.
இதனால் மகாராஷ்டிராவில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து நிதிஷ் ரானே கூறுகையில், குஜராத் அரசு சைவ குடியிருப்புகளை கட்டி வருகிறது. அதே போல் மகாராஷ்டிரத்தையும், சைவ ஓட்டல்கள், சைவ குடியிருப்புகள், சைவ மருத்துவமனைகள் என்று மாற்றி வருகின்றனர்.
எனவே, மகாராஷ்டிராவை சைவமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது என்றும் மோடியை ஆதரிக்கும் குஜராத்திகள் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி குஜராத்துக்கு செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தற்போது இவருடைய கருத்துக்கு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் அவரது டுவிட்டர் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment