Search This Blog n

14 August 2013

நாடாளுமன்றத்தில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு


இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற நரேந்திர மோடிக்கு ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும், எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சியும் தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளன.
தொழிலாளர் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாரி கார்டினர் இதுதொடர்பாக மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் “நவீன இந்தியாவின் எதிர்காலம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பார் கூறுகையில், மோடிக்கும், எங்கள் கட்சிக்கும் உள்ள நீண்ட கால உறவின் அடிப்படையில், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மக்கள் மற்றும் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த மக்களும் மோடியை சந்திக்கவும், அவரது உரையை கேட்கவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
மோடி யாராலும் புறக்கணிக்க முடியாத சிறந்த அரசியல் தலைவர் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சைலேஷ் வாராவும், உரை நிகழ்த்த நரேந்திர மோடிக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

Post a Comment