Search This Blog n

12 August 2013

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு


இந்திய நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவதால் டாலருக்கு எதிரான ரூபாய்வெளி மதிப்பை உயர்த்த மத்திய அரசு திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்து வருவதால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இதனால், அதிகளவில், அன்னியச் செலாவணி வெளியேறுவதால், ரூபாய்மதிப்பு சரிவடைந்து வருகிறது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பாண்டின் மே மாதம் முதல் இதுவரையிலுமாக, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு 12 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த 2012-13ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.8 சதவீதமாக மிகவும் அதிகரித்திருந்தது.
நடப்பாண்டிலும் இது உயர்ந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்திடும் வகையில், மத்திய அரசு தங்கம் உள்ளிட்ட பல்வேறு இறக்குமதி பொருட்கள் மீதான சங்க வரியை உயர்த்தியுள்ளது.
குறிப்பாக, தங்கம் இறக்குமதி மீதான சங்க வரி, படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அரசின் இத்திட்டத்திற்கு, ஓரளவிற்கு பலன் கிடைத்தது என்றாலும், ஏற்றுமதி குறைவால் அன்னியச் செலாவணி வரத்து குறைந்துள்ளது.
அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதும், டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பின் சரிவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரச, சொகுச பொருட்கள் மற்றும் சாதனங்கள் மீதான சங்க வரியை உயர்த்த, திட்டமிட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது.
குறிப்பாக, ஸ்மார்ட்போன், மடிக்கணினிக்கான பேட்டரிகள், டேப்லெட் கம்ப்யூட்டர்கள், சொகுச வகை கடிகாரங்கள், வெளிநாட்டு மது பானங்கள், "ஏசி' சாதனங்கள், பிரிட்ஜ். எல்.இ.டீ., - டிவி., மதிப்பு மிகு உலோகங்கள் போன்றவற்றின் மீதான இறக்குமதி வரியை, மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பு, கூடிய விரைவில் வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட நடவடிக்கைகளுடன், மத்திய அரச, அன்னியச் செலாவணி வரத்தை அதிகரிக்கும் வகையிலும், திட்டங்களை அறிவிக்க உள்ளது.
இதன்படி, வெளிநாட்டு வர்த்தக கடனை (இ.சி.பி) அதிகளவில் பெரும் வகையில், அதற்கான நெறிமுறைகளை எளிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்கள், அயல்நாடுகளில் கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டும் வகையிலும், நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீட்டை பெறும் வகையிலும், திட்டம் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அரச கடன்பத்திரங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்கும் வகையில், உச்சவரம்பை உயர்த்துவதுடன், அதற்கான வட்டி விகிதங்களும் மாற்றி அமைக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
நாட்டின் தொழில் துறை உற்பத்தி, கடந்த இரண்டு மாதங்களாக, மிகவும் சரிவடைந்து உள்ளது. எனவே, மத்திய அரச, உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தயாரிப்பு பொருட்களின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
சொகுச பொருட்கள் மற்றும் சாதனங்கள் தவிர, புகையிலை பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றின் மீதான சங்க வரியும் உயர்த்தப்பட உள்ளது.
தற்போதைய நிலையில், சிறப்பு வகை உலோகங்கள் மற்றும் மதிப்பு மிகு நவரத்தினங்கள் மீதான சங்க வரி, 10 சதவீத அளவிற்கும், புகையிலை பொருட்கள் மீதான சங்க வரி, 30 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. இவற்றின் மீதான சங்க வரியை உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது.
நாட்டின் மோட்டார் வாகன துறை மந்தமாக உள்ளதால், மோட்டார் வாகன துறையின் இறக்குமதி மீதான சங்க வரி, உயர்த்தப்படாது என்ற கருத்தும் உள்ளது.
தற்போதைய நிலையில், அன்னிய நிதி நிறுவனங்கள், அரச கடன்பத்திரங்களில் மேற்கொள்வதற்கான முதலீட்டு உச்ச வரம்பு, 2,500 கோடி டாலர் என்ற அளவிலும், நிறுவன கடன்பத்திரங்கள் மீதான முதலீட்டு உச்சவரம்பு, 5,100 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளது.
அன்னியச் செலாவணி வரத்தை மேம்படுத்தும் வகையில், மேற்கண்ட முதலீடு உச்சவரம்பை உயர்த்தவும், அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 

0 கருத்துகள்:

Post a Comment