This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 September 2015

வருமான வரித்துறையினர் நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் திடீர் சோதனை

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறையினர் இன்று சென்னை, மதுரை, கொச்சி, ஹைதராபாத்தில் என மொத்தம் 25 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய்யின் வீடு, அவரது அலுவலகம், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, இயக்குனர் சிம்புதேவன் அலுவலகம், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, மதுரை அன்பு, செல்வகுமார் மற்றும் புலி படக் குழுவினர்...

29 September 2015

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது காவிரி கண்காணிப்பு குழு அறிவிப்பு

பருவமழை பொய்த்து விட்டதால் தமிழ்நாட்டுக்கு மேலும் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் கர்நாடகம் தெரிவித்தது. கண்காணிப்பு குழு கூட்டம் காவிரி கண்காணிப்பு குழுவின் 5–வது கூட்டம் அதன் தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான சசிசேகர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், பொதுப்பணித்துறை செயலாளர் பழனியப்பன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக...

28 September 2015

சுழற்பந்து வீச்சை சமாளிப்போம்” தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் டொமிங்கோ பேட்டி

இந்தியாவின் சுழற்பந்து வீச்சு அச்சுறுத்தலை சமாளிப்போம் என்று தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் டொமிங்கா கூறியுள்ளார். வந்தது தென்ஆப்பிரிக்கா தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டி இமாலச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலை வாசஸ்தலமான தர்மசாலாவில் வருகிற 2-ந்தேதி...

27 September 2015

பிறந்து சில நாட்களே ஆன, ஆண் குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில்விட்டுச்சென்ற பெண்?

பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை தாம்பரம் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண் ஒருவர் விட்டுச்சென்று விட்டார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. ஆதரவற்றோர் இல்லம் சென்னையை அடுத்த தாம்பரம் லோகநாதன் தெருவில் ‘குட்லைப் சென்டர்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். பாஸ்கர் என்பவர் இந்த ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வருகிறார். நேற்று காலை 7.30 மணியளவில்...

புதிய கல்வி வரைவுக்கொள்கை ஆண்டு இறுதியில் மத்திய மந்திரி அறிவிப்பு ?

உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு கூட்டத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர், ‘‘நாட்டின் புதிய கல்வி வரைவுக்கொள்கை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும். கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கும், மாணவர்கள் சிறப்பான உயர் கல்வியைப் பெறவும் தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என கூறினார். மேலும், கல்வித்திட்டத்தை காவிமயமாக்க...

25 September 2015

போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 8 வயது சிறுமி: பாராட்டு விழா

கோவையைச் சேர்ந்த 8 வயது சிறுமி டெல்லியில் நடைபெற்ற 8-வது காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் - தங்கமணி தம்பதி. இவர்களுக்கு விஷ்ணுபிரியா, நிவேதிதா என இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுமிகள் இருவருமே தற்காப்புக் கலையான கராத்தே போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியான நிவேதிதா,...

21 September 2015

நீதிமன்ற வாசலில் ரவுடி வெட்டிக் கொலை.?

   திண்டுக்கல் நீதிமன்ற வாசலில் பிரபல ரவுடி ஜேசுராஜ் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூட்டுக்கும் புகையிலைக்கும் பிரியாணிக்கும் புகழ்பெற்ற திண்டுக்கல், ரவுடிகளுக்கும் பெயர் பெற்ற நகரமாகிவிட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு திண்டுக்கல் நீதிமன்ற வளாகம் அருகே கவுன்சிலர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் படுகாயமடைந்தனர்.கடந்த ஆண்டு 53 வழக்குகளில்...

19 September 2015

இந்திய வம்சாவளி தமிழ் பெண்ணுக்கு அமெரிக்க அரசு விருது:

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவேதா பிரபாகரன் என்ற தமிழ் பெண்ணுக்கு சிறந்த சேவைக்கான இளம் பெண் விருதை வெள்ளை மாளிகை வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. அமெரிக்க அரசு, அந்நாட்டின் சமூக மேம்பாட்டிற்காக சேவை  செய்யும்  இளம் பெண்களை கண்டறிந்து, அவர்களை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து 'சாம்பியன் ஆஃப் சேன்ஞ்' என்ற விருதை வழங்கி வருகிறது.இந்த வகையில் வழக்கறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில் முனைவோர் என  பலதரப்பட்டவர்கள்...

டெல்லியில் காற்றில் படியும் மாசால் உயிரிழப்பு அதிகரிக்கும் !

காற்றில் படியும் மாசால் உயிரிழப்பு அதிகரிக்கும் முதல் நகரம் டெல்லி என்று லண்டன் நறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் காற்றில் அதிக மாசு படியும் நகரங்களில் டெல்லி  முதலிடத்தில் இருப்பதாகவும் அடுத்ததடுத்த இடங்களில் கொல்கத்தா,  மும்பை இடம் பிடித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது. வரும் 2025ம் ஆண்டில் இந்த மாசு காரணமாக  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் இதில் டெல்லியில் மட்டும் 32 ஆயிரம்...

14 September 2015

இந்தியா விஜயம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க?

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவிற்கு செல்லவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் முக்கயஸ்தர்களை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர்...

13 September 2015

நண்பராக பேஸ்புக்கில் பழகி 200 பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து பணம் பறித்த மாணவன்

ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத் (21). மலக்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 1½ வருடங்களாக ‘பேஸ் புக்’கில் பெண்கள் பெயரில் போலி பக்கங்களை தொடங்கினார். பின்னர் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பணக்கார மாணவிகளை குறிவைத்து பழகினார். பலர் இவர் ஆண் என்பது தெரியாமல் பழகினார்கள். அப்துல் மஜீத் பெண்களை கவரும் வகையில் பேசி அவர்களின் புகைப்படத்தை கேட்டு பெறுவார்....

09 September 2015

ஆஸ்திரேலியாவில் ஆங்கில வார்த்தை போட்டியில் சிறுவன்,சாதனை?

ஆஸ்திரேலிய நாட்டில் ‘தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ’ என்ற தலைப்பில் ஆங்கில வார்த்தை போட்டி நடைபெற்றது. நீண்ட, கடினமான வார்த்தைகளின் எழுத்துக்களை சரியாக எழுத்து கூட்டி சொல்கிற இந்த போட்டியில் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட 9 வயது சிறுவன் அனிருத் கதிர்வேல் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை  பெற்றான். இதற்காக அவனுக்கு 50 ஆயிரம் டாலர் கல்வி நிதி உதவியும், 10 ஆயிரம் டாலர் பரிசுப்பொருட்களும் கிடைத்துள்ளன. இது குறித்து அனிருத் கதிர்வேல்...

அதிநவீன கருவிகளுடன் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு ?

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்தும் வகையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு,...

07 September 2015

அகதிகள் முகாமில் ஈழத்தமிழர் தீக்குளித்து தற்கொலை

தமிழகத்தின் திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில்,  மூன்று வயது குழந்தையின் தாய் ஒருவர்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி, கொட்டப்பட்டு  இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி  இலங்கை தமிழர்களான இவர்களுக்கு, கடந்த, நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தநிலையில், ராமஜெயம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால்...

04 September 2015

சந்திரிகா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு ! ! !

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நேற்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள்  இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில் புதுடில்லியில் நடைபெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்றுள்ள அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தமை  குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

03 September 2015

ஈழத் தமிழர் தூக்கிட்டுத் தற்கொலை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை – பல்லாவரம், பொழிச்சலூரை பகுதியில் ஈழத் தமிழர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ளார். சென்னையை அடுத்த பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சலூரை சேர்ந்தவர் ஸ்ரீகரன் (55) ஈழத் தமிழரான இவர், கடந்த 1990-ம் ஆண்டு முதல் இங்கு வசித்து வருகிறார். இவரது 2 மகன்கள் நெதர்லாந்தில் வேலை பார்த்து வருகின்றனர். நீண்ட காலமாக கடுமையான தலைவலியால் ஸ்ரீகரன் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஸ்ரீகரன் மருத்துவமனையில் தங்கி...

கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு மாணவன் தற்கொலை

பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை என்று தனது செல்போனில் உள்ள வாட்ஸ அப்பில் எழுதி வைத்துவிட்டு 13-வயது மாணவன் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சானு (வயது 14) காசியாபாத்தில் உள்ள பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறான். இவன் உத்தபிரதேசத்தில் உள்ள காசியாபத்தில் அவர்களுடைய தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறான். இவரது தந்தை டெல்லியில் உள்ள பிரபல நிறுவனத்தில்...