This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 May 2013

தேர்வில் முதல் இடத்தை 9 மாணவிகள்??


தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்யப்பட்டது.
அதே போன்று, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் யூன் 20ம் திகதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி ‌தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
 

25 May 2013

திரு,டி.எம்.செளந்தரராஜன் காலமானார்,

 
மிழ் திரையுலகின் பிபரல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் காலமானார். அவருக்கு வயது 91. சுவாசக் கோளாறு காரணமாக சென்னை மயிலாப்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சில தினங்களாக சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிறபகல் 3.50 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது. 1922ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்தார் செளாந்தர ராஜன். திருவிளையாடல், பலே பாண்டியா, அம்பிகாபதி, பாசமலர், பச்சைவிளக்கு, மலைக்கள்ளன், நாடோடி மன்னன், பறக்கும் பாவை, ஆயிரத்தில் ஒருவன், பாகப் பிரிவினை, வசந்த மாளிகை, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்களில் பாடியிருக்கிறார்,எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், நாகேஸ்வரராவ் உள்ளிட்ட பழம் பெரும் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார். பத்ம ஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள சவுந்தரராஜன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு நாளை (26.05.13) நடைபெறுகிறது இசை மேதைக்கு எமது இறுதி வணக்கங்கள்

மேயரை சந்திக்க முடியாது: செக்ஸ் அடிமைகள் ?


போரின் போது களைப்படைந்த வீரர்களுக்கு பெண் செக்ஸ் அடிமைகள் தேவை என்று ஜப்பானின் ஒசாகா நகர மேயர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகர மேயராக இருப்பவர் டோரு ஹஷிமோடோ, மறு சீரமைப்பு கட்சியைச் சேர்ந்தவர்.
இவர், போரின் போது தென் கொரியாவைச் சேர்ந்த பெண்கள் பலரை செக்ஸ் அடிமைகளாக, ஜப்பான் இராணுவத்தினர் வைத்திருந்த தகவலை பெருமையாக குறிப்பிட்டார்.
இதற்கு தென் கொரியாவைச் சேர்ந்த அப்போதைய செக்ஸ் அடிமைப் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தாங்கள் கொடுமைப்படுத்தப்பட்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இப்போது, 85 வயதாகும் இரு முன்னாள் செக்ஸ் அடிமை பெண்களை சந்திக்க, மேயர் டோரு ஹஷிமோடோ விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் மேயரை சந்திக்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.
பெண்களை போகப் பொருளாக கருதும் மேயருடன், நாங்கள் எவ்வித சந்திப்பையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
 

24 May 2013

56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகிறார்கள்

சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகிறார்கள் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இன்று சவுதி செல்லும் சல்மான் குர்ஷித், டெல்லியில் நேற்று உருது பத்திரிகை ஆசியர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் பேசியதாவது:
சவுதியில் இருந்து இன்னும் 1 1/2 மாதத்தில் 56,700 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்புகின்றனர். இவர்களிடம் செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட், விசா இல்லாததால் இந்தியா திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என இவர்கள் அனைவரும் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு அளித்துள்ளனர்.
இவர்களின் சொந்த மாவட்டத்தின் அதிகாரிகளிடம் இருந்து தேவையான ஆவணங்களை பெற வேண்டியுள்ளது. அவற்றை சரிபார்க்க கூடுதலாக 10 அதிகாரிகள் இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சவுதியில் உள்ள பல்வேறு நகரங்களில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரம் இந்தியர்கள் தன்னார்வ தொண்டர்களாக தாயகம் திரும்ப விரும்பும் இந்திய தொழிலாளர்களின் மனுக்களை பரிசீலித்து வருகின்றனர்

துப்பாக்கியுடன் சினிமா பைனான்சியர் /


 சென்னை கீழ்ப்பாக்கத்தில் சினிமா பைனான்சியர் விஜயகர் துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்து 10 மணி நேரம் பொதுமக்களையும், பொலிஸாரையும் பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளார்.
 சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சப்த மாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விஜயகர், கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதனால், கோபமடைந்த வீட்டு உரிமையாளரும், குடியிருப்பு வளாக நல சங்கத்தினரும் விஜயகரை, வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு குடியிருப்போர் நல சங்க அலுவலகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த விஜயகர், தன்னால் எந்த பிரச்சினையும் இல்லை என கடிதம் எழுதி தருமாறு மிரட்டியுள்ளார்.
அத்துடன், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மேல் நோக்கிசுட்டதுடன், அங்கிருந்த ஊழியரை தாக்கிவிட்டு தன் வீட்டுக்கு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார்.
இதுகுறித்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் குவிந்தனர்.
தன் வீட்டில் இருந்த பெண்ணை, துப்பாக்கியால் சுட்டு விடுவதாக விஜயகர் பொலிஸாரை மிரட்டினார். தனது வீட்டைவிட்டு காரில் பெண்ணுடன் தப்ப முயன்ற விஜயகரை பொதுமக்கள் சரமாரியாக அடித்துப் பிடித்தனர். காலை 11:00 மணிக்கு ஆரம்பமான இந்த மிரட்டல் இரவு 9:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
விஜயகரைக் கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தியபோது அவர் ஒன்றரை வருடமாக மன நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவர்களும் அதனை உறுதி செய்தனர்.
இதையடுத்து, எழும்பூர் 13வது நீதவான் சிவசுப்பிரமணியன் முன்னிலையில், அவரை ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு பொலிஸார் அழைத்து சென்றனர். ஆனால் மன நலம் பாதிக்கப்பட்டவரை சிறையில் அனுமதிக்க முடியாது என சிறைத் துறையினர் மறுத்து விட்டனர்.
இதையடுத்து, நீதவானின் உத்தரவுபடி, கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் விஜயகரை பொலிஸார் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 

என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல்"


என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட ஒன்றிய செயலர்கள், கவுன்சிலர்கள் என அனைவரையும் தனித்தனியே அழைத்து ராகுல் பேசினார்.
அப்போது, ராகுல் பேசியதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது, காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டி பூசலை தவிர்த்து, ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் சாதனைகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளையும், மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என ராகுல் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர், நான் அப்படி அல்ல. கட்சியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் மற்றும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

மலேசியாவில் 4 தமிழர்களுக்கு ??


 மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மலேசிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிரபலமான பெண் அழகுக் கலை நிபுணரும், தொழிலதிபருமான சோசிலாவதி லாவியா உள்ளிட்ட நான்கு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது. அக்கொலை வழக்கில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூருக்கு அருகில் பான்டிங் பகுதியில் வழக்கறிஞர் பத்மநாபனுக்குச் சொந்தமான ஒரு பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் திகதி சோசிலாவதி நில விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக தனது வழக்கறிஞர் அகமது கமீல் கரீம், வங்கி அதிகாரியான நூரிஷாம் முகம்மது மற்றும் கார் டிரைவர் ஆகியோருடன் போயிருந்தார்.
ஆனால் நான்கு பேரும் பத்மநாபனின் பண்ணை வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டனர். இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், நான்கு பேரின் எலும்புக் கூடுகளும் பத்மநாபனின் பண்ணைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டு, பத்மநாபன் உட்பட நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நில விவகாரம் தொடர்பாக நான்கு பேரையும் பத்மநாபன் கும்பல் கொலை செய்தது பின்னர் தெரிய வந்தது.
இதுதொடர்பாக நீதிபதி ததுக் அக்தர் தஹிர் அளித்த தீர்ப்பில்,
குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் பத்மநாபன் (43வயது), மற்றும் அவரது பண்ணை வேலையாட்களான தில்லையழகன், மதன், காத்தவராயன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை என்பதற்காக குற்றவாளிகள் 4 பேரையும் தண்டிக்காமல் இருந்துவிட முடியாது. இந்த கொலையை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே அவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிப்பதாகவும் அறிவித்தார்