சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகிறார்கள் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இன்று சவுதி செல்லும் சல்மான் குர்ஷித், டெல்லியில் நேற்று உருது பத்திரிகை ஆசியர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் பேசியதாவது:
சவுதியில் இருந்து இன்னும் 1 1/2 மாதத்தில் 56,700 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்புகின்றனர். இவர்களிடம் செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட், விசா இல்லாததால் இந்தியா திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என இவர்கள் அனைவரும் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு அளித்துள்ளனர்.
இவர்களின் சொந்த மாவட்டத்தின் அதிகாரிகளிடம் இருந்து தேவையான ஆவணங்களை பெற வேண்டியுள்ளது. அவற்றை சரிபார்க்க கூடுதலாக 10 அதிகாரிகள் இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சவுதியில் உள்ள பல்வேறு நகரங்களில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரம் இந்தியர்கள் தன்னார்வ தொண்டர்களாக தாயகம் திரும்ப விரும்பும் இந்திய தொழிலாளர்களின் மனுக்களை பரிசீலித்து வருகின்றனர்

0 கருத்துகள்:
Post a Comment