டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி தனது ஆண் நண்பருடன் சென்ற 23வயது மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராம்சிங் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கைதான 5 பேர் டெல்லி திகார் ஜெயிலிலும், 18 வயதுக்கு குறைவான ஒரு நபர் மட்டும் சிறார் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான ராம்சிங் கடந்த மார்ச் மாதம் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டான்.
மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை பற்றி டெல்லி போலீஸ் கமிஷனர் நீராஜ் குமார் கூறுகையில், மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விரைவு கோர்ட்டில் கடந்த ஜனவரியில் விசாரணை தொடங்கியது. இதில் 90 சதவீத விசாரணை முடிவடைந்து உள்ளது.
இதனால் இந்த வழக்கில் இம்மாத இறுதியில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்
0 கருத்துகள்:
Post a Comment