கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை உடனே நிறுத்த கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலைய அணுக்கழிவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மனுதாரர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும் பாதுகாப்பு விதிகளை முறையாக செயல்படுத்தும்வரை அணு உலையை இயக்கத் தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று வழங்கவுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment