Search This Blog n

10 May 2013

மோசடி ஸ்டாராக மாறிய பவர் ஸ்டார்! புகார்கள்


 மோசடி வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ரங்கநாதன் என்பவருக்கு ரூ.20 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் கமிஷன் பெற்று ஏமாற்றினார் பவர் ஸ்டார்.
இதையடுத்து ரங்கநாதன் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில், பவர் ஸ்டார் கடந்த 26ம் திகதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மேலும் 3 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பவர் ஸ்டாரை ஏற்கனவே தங்கள் காவலில் எடுத்து விசாரித்த பொலிசார் தற்போது அவரை மீண்டும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் பவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிந்த பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் பவர் ஸ்டார் மீது ஏராளமானோர் புகார் கொடுத்து வருகின்றன

0 கருத்துகள்:

Post a Comment