Search This Blog n

10 May 2013

புதிய முதலமைச்சர் யார்? இன்று கூட்டம் நடைபெறுகிறது


கர்நாடக புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
மொத்தம் உள்ள 224 இடங்களில் அந்த கட்சிக்கு 121 இடங்கள் கிடைத்துள்ளன. சட்டசபை காங்கிரஸ் தலைவரை (முதல்-மந்திரி) தேர்ந்தெடுப்பதற்காக, புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பிற்பகலில் பெங்களூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, கர்நாடக மாநில பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான மதுசூதன் மிஸ்த்ரி, மாநில தேர்வுக்குழு தலைவர் லுய்ஜினோ பெலைரோ, மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
புதிய கர்நாடக முதல்-மந்திரி தேர்வு குறித்து மேலிட பார்வையாளர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிகிறார்கள்.
அதன்பின்னர் இதுபற்றி மேலிட பார்வையாளர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தெரிவிப்பார்கள்.
அவர் புதிய முதல்-மந்திரியை தீர்மானித்து அறிவிப்பார். புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே முதல்-மந்திரி பதவியைப் பிடிக்க அரை 12க்கும் அதிகமான தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

Post a Comment