Search This Blog n

09 May 2013

பாகிஸ்தான் கைதி சனாவுல்லா உயிரிழந்தார்


ஜம்மு சிறையில் சக கைதி ஒருவரால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி சனாவுல்லா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.
பாகிஸ்தான் கைதி சனாவுல்லா கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிறுநீரகம் செயலிழந்து விட்டதால் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், அங்கிருந்த கைதிகளால் தாக்கப்பட்டதில் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார்.
அதன் எதிரொலியாக, ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த, கைதிகளில் ஒருவனான, சனாவுல்லா(வயது 52) என்பவனை, ஜம்மு சிறைக் கைதிகள் தாக்கியதில் அவன், கோமா நிலையை அடைந்தான்.
இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக, 1999ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சனாவுல்லாவுக்கு, சண்டிகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

Post a Comment