பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர்.
குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தியதால் விவாகரத்தான இவருக்கு குழந்தைகளிடமும் அன்பாக இருக்கத் தெரியவில்லை. எனவே நீதிமன்றம் இவரை வேறொருவர் முன்னிலையில் தான் தன் குழந்தைகளைப் பார்த்துப் பேச வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் மனம் வெறுத்துப் போன தந்தை யாரும் அறியாமல் குழந்தைகளைத் தனது வீட்டிற்க்குக் கொண்டு வந்து கழுத்தை அறுத்து கொலைச் செய்துள்ளார்.
தனது குற்றத்தைப் பொலிசாரிடம் ஒத்துக்கொண்ட இந்தத் தந்தை கொலைக்கான நோக்கம் எதையும் விவரிக்கவில்லை. இவர் குழந்தைகளைக் கொல்லப் பயன்படுத்திய கத்தியை பொலிசார் கைப்பற்றினர்.
கொலை செய்து விட்டு வெளியே வந்த இவர் தன் மனைவியைப் பார்த்ததும் காலில் ரோலர் ஸ்கேட்ஸைப் பொருத்திக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
அவர் உடையில் ரத்தம் படிந்திருப்பதைப் பார்த்த அவரது மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டான் என்று கூறி கதறியழுதார். உடனே மனநல மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
0 கருத்துகள்:
Post a Comment