Search This Blog n

15 May 2013

3 வயது மகளுடன் வீதியில் வசிக்கும் தந்தை


இந்தியாவை சேர்ந்த நபரொருவர் தன்னுடைய 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்தவர் முகம்மது சிக்கந்தர் சாம்ராட், இவரது மனைவி அனிஷா.
பஹ்ரைனில் நர்சாக வேலை செய்து வந்தார். இதற்கிடையில் பஹ்ரைன் நாட்டுக்காரர் ஒருவருக்கு கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை வாங்கி தரும் தரகராக சிக்கந்தர் சாம்ராட்டும் பஹ்ரைனில் தங்கி தொழில் செய்து வந்தார்.
திடீரென இவரது தொழில் கூட்டாளி சுமார் 65 ஆயிரம் பஹ்ரைன் தினார்களை மோசடி செய்துவிட்டார்.
அதனால் 2010ம் ஆண்டு பிறந்த மகளுக்கு பணம் இல்லாத காரணத்தால் பாஸ்போர்ட் வாங்க முடியாமல் போனது.
இதற்கிடையில், மனைவியின் நர்ஸ் வேலைக்கான ஒப்பந்தமும் காலாவதியாகி விட்டது.
குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத சாம்ராட், மனைவி- பிள்ளைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட முடிவு செய்தார்.
கடைசி மகளுக்கு பாஸ்போர்ட் எடுக்காததால் அவளை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு மோசடி செய்த பஹ்ரைன் ஆசாமி மீது நீதிமன்றத்தில் வழக்கு போட்டு விட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.
வக்கீலுக்கு கொடுக்க பணம் இல்லாததால் பல வக்கீல்கள் இவரது வழக்கில் ஆஜராகாமல் இழுத்தடித்துக்கொண்டு வருகின்றனர்.
வீட்டிற்கு வாடகை கொடுக்க கூட பணம் இல்லாத காரணத்தால் 6 மாத காலமாக சரியான உணவு இல்லாமல் பூங்கா, மசூதி, கார் நிறுத்துமிடம் என காலம் கடத்தி வருகிறார்.
 

0 கருத்துகள்:

Post a Comment