அதன்படி, அமைச்சர்கள் படியலுக்கு சோனியா காந்தி அனுமதி அளித்தப் பிறகு பெங்களூர் திரும்பிய, சித்தராமையா அமைச்சர்கள் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்தார். கர்நாடகாவில் அதிபட்சமாக முதல்வர் உள்பட 34 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க முடியும். ஆனால், 28 அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு அமைச்சர் சபை விஸ்தரிக்கப்பட்டது.
புதிய அமைச்சர்கள் 28 பேரும் இன்று காலை பதவி ஏற்றனர். கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா காலை 10.30 மணிக்கு தொடங்கியது. புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதியும் செய்து வைத்தார். 20 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 8 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
11.15 மணிக்கு பதவி ஏற்பு விழா முடிவடைந்தது. விழாவில் முதல்வர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு இன்று மாலை இலாகா ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. நடிகர் அம்பரிஷ் கேபினட் அமைச்சராகவும், நடிகை உமாஸ்ரீ இணை அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.
இன்று பதவி ஏற்ற கேபினட் அமைச்சர்கள் விபரம் வருமாறு:
ஆர்.வி.தேஜ்பாண்டே, ராமலிங்க ரெட்டி, டி.பி.ஜெயச்சந்திரா, உமர்- உல்-இஸ்லாம், பிரகாஷ் ஹுக்கேரி, எச்.கே. பாட்டில், சாமனூர் சிவசங்கரப்பா, ஸ்ரீனிவாஸ் பிரசாத், ராமநாத் ராய், டாக்டர் மகாதேவப்பா, நடிகர் அம்ரிஷ், எச்.எஸ்.மகாதேவ பிரசாத், கே.ஜே. ஜார்ஜ், வினய் குமார் சரக், பாபுராவ் சின்சனசூர், சதீஷ் சார்க்கிஹோலி, ஆஞ்சநேயா, சிவராஜ் எஸ். தங்கடகி, எம்.பி. பாட்டில்.
இணை அமைச்சர்கள்:
தினேஷ் குண்டுராவ், கிருஷ்ண பேரேகவுடா, சரண பிரகாஷ்பாட்டில், அபய் சந்திர ஜெயின், நடிகை உமாஸ்ரீ, சந்தோஷ்லட், பரமேஸ்வரர் நாயக், கிம்னே ரத்னகர்.
இன்னும் 5 மந்திரிகள் பதவி நிரப்பப்பட வேண்டும். மூத்த தலைவர்களுக்கு அப்பதவி வழங்கப்படும் என்றும், அவர்கள் ஊழல் புகாரில் சிக்கி இருப்பதால் பெயர் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
0 கருத்துகள்:
Post a Comment