Search This Blog n

24 May 2013

என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல்"


என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட ஒன்றிய செயலர்கள், கவுன்சிலர்கள் என அனைவரையும் தனித்தனியே அழைத்து ராகுல் பேசினார்.
அப்போது, ராகுல் பேசியதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது, காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டி பூசலை தவிர்த்து, ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் சாதனைகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளையும், மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என ராகுல் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர், நான் அப்படி அல்ல. கட்சியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் மற்றும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

0 கருத்துகள்:

Post a Comment