போரின் போது களைப்படைந்த வீரர்களுக்கு பெண் செக்ஸ் அடிமைகள் தேவை என்று ஜப்பானின் ஒசாகா நகர மேயர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகர மேயராக இருப்பவர் டோரு ஹஷிமோடோ, மறு சீரமைப்பு கட்சியைச் சேர்ந்தவர்.
இவர், போரின் போது தென் கொரியாவைச் சேர்ந்த பெண்கள் பலரை செக்ஸ் அடிமைகளாக, ஜப்பான் இராணுவத்தினர் வைத்திருந்த தகவலை பெருமையாக குறிப்பிட்டார்.
இதற்கு தென் கொரியாவைச் சேர்ந்த அப்போதைய செக்ஸ் அடிமைப் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தாங்கள் கொடுமைப்படுத்தப்பட்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இப்போது, 85 வயதாகும் இரு முன்னாள் செக்ஸ் அடிமை பெண்களை சந்திக்க, மேயர் டோரு ஹஷிமோடோ விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் மேயரை சந்திக்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.
பெண்களை போகப் பொருளாக கருதும் மேயருடன், நாங்கள் எவ்வித சந்திப்பையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment