பிரிட்டனில் குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் கவுரவக் கொலைகளை தடுக்க முடியும் என்று அரசு நம்புகிறது. பல நாட்டு மக்கள் வசிக்கும் பிரிட்டனில் குடும்ப கவுரவத்துக்காக இளம் வயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
அது மட்டுமின்றி மதம், ஜாதி மாறி காதலிப்பவர்களை கவுரவ கொலைகளும் செய்து விடுகின்றனர்.
இவற்றை தடுக்க பிரிட்டன் அரசு தீவிர முயற்சிகள் எடுத்தும், பிரசாரம் மேற்கொண்டும் வருகின்றது. எனினும் கட்டாய திருமணங்களும், கவுரவ கொலைகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
0 கருத்துகள்:
Post a Comment