புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் கட்சி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு மத்திய மந்திரி நாராயணசாமி பேசியதாவது:-
ராஜீவ்காந்தி நம்மோடு இருந்திருந்தால் இந்தியா சீனாவை தாண்டி வளர்ச்சி பெற்று இருக்கும். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்தினார். அனைத்து கட்சிகள் வித்தியாசமின்றி வரவேற்று கைதட்டினார்கள். துரதிர்ஷ்டவமாக அவரை இழந்து விட்டோம்.பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டு வந்தது அவர்தான். இதன் மூலம் 30 லட்சம் பெண்கள் உள்ளாட்சி பதவிகள் வகிக்கிறார்கள். வருங்காலத்தில் உள்ளாட்சியில் 5 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து ராஜீவ் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் சில கட்சிகள் தவறான பிரசாரம் செய்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு இந்த கட்சிகள் என்ன உதவி செய்திருக்கிறது? தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இலங்கை அகதிகள் வசிக்கிறார்கள். இந்த அகதிகளுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது.
2009-ம் ஆண்டு போருக்கு பிறகு இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் கல்வி, சுகாதாரம், மின்சார உற்பத்தி, ரெயில் பாதை அமைப்பது, குடிநீர் வசதி, வீட்டு வசதி ஆகியவற்றுக்காக ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் களை மத்திய அரசுதான் வாரி வழங்கி இருக்கிறது. இந்த திட்டங்களை செயல் படுத்துவதற்கு இலங்கை அரசு கால தாமதம் செய்த போது மத்திய அரசு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் இலங்கைக்கு அனுப்பி திட்டங்களை தீவிரப்படுத்தியது. இவற்றையெல்லாம் மறைத்து விட்டு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது.
இலங்கை தமிழர்களுக்கு காங்கிரசை தவிர வேறு எந்த கட்சியும் எதையும் செய்திருக்க முடியாது. காங்கிரசார் வாய்மூடி மவுனமாக இருப்பதால்தான் இந்த கட்சிகள் மக்களிடம் தவறான கருத்துகளை பரப்புகிறார்கள். எனவே ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த உதவியை விளக்க வேண்டும்

0 கருத்துகள்:
Post a Comment