ஆந்திர மாநிலம் அனந்த புரம் மாவட்டம் யாசாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரண்ணசவுடு (30). விவசாயியான இவருக்கு சவுமியா (25) என்ற மனைவியும், சந்தோஷ் (4) என்ற மகனும் உள்ளனர்.
வீரண்ணா சவுடுவுக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது. இது தவிர அருகில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து அதில் வேர்கடலை பயிரிட்டார். இதற்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் மழை இல்லாததால் பயிர்கள் அனைத்தும் கருகி விட்டது.
இதனால் வாங்கிய கடனை எப்படி கட்டுவது என்று தெரியாமல் தவித்தார். ஏற்கனவே மகன் சந்தோசுக்கு தலையில் ஏற்பட்டு இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினார். மருத்துவ செலவுக்காக வீரண்ணசவுடு பலரிடம் கடன் பெற்றார். கடன்காரர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடன் வாங்கி பயிர் செய்த நிலக் கடலை பயிர்கள் கருகியதால் வீரண்ண சவுடு வேதனை அடைந்தார். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு தயிர் சாதத்தில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து மனைவி, குழந்தைக்கு கொடுத்து தானும் சாப்பிட்டார். இதில் 3 பேரும் பரிதா பமாக இறந்தனர்.

0 கருத்துகள்:
Post a Comment