பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கைதி சரப்ஜித் சிங், கடந்த வாரம் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.
ஜின்னா மருத்துவமனையில் 'கோமா' நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த 2ம் திகதி மரணமடைந்தார்.
இந்நிலையில், சரப்ஜித் சிங் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோட் லக்பத் சிறையில் உள்ள 36 இந்திய கைதிகளில் 20 பேர் மனநோயாளிகளாக உள்ளனர் என்னும் திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த நீதிபதிகள் அடங்கிய குழுவினர், பாகிஸ்தானில் உள்ள அனைத்து சிறைகளிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலையை கடந்த வாரம் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது கோட் லக்பத் சிறையில் உள்ள 36 இந்திய கைதிகளில் 20 பேரும், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் 2 இந்திய கைதிகளும், கராச்சியில் உள்ள மலிர் சிறையில் 1 இந்திய கைதியும் மனநோயாளிகளாக உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டவர்கள், மனநோயாளிகள், பேச்சுத் திறன், கேட்டும் திறனற்ற கைதிகளை தகுந்த மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? என்ன குற்றம் செய்தவர்கள்? என்ற பாகுபாடின்றி இவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது
0 கருத்துகள்:
Post a Comment