இந்தியாவில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இந்தியப் பயணத்தின்போது மிகவும் கவனமாக இருக்குமாறு தனது நாட்டு மக்களை பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குப் போக திட்டமிட்டால் அங்கு கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அரசு அறிவுறுத்துகிறது.
மேலும் அங்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது. எனவே இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
இதனைத் தொடந்து அஜ்மீர் தர்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ள 600 யாத்ரீகர்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment